ஈர மணலில் தொலைந்த பாதங்களைத் தேடுகிறோம்.
ஈர மணலில் இதமாய் நடந்த பாதங்கள்.
பாதங்கள் இட்டுச் சென்ற பள்ளத்தில்.
ஊற்றெடுக்கும் நீராய், ஊறுகிறது பாசம்.
வளைந்து நெளிந்து நடந்த பாத அச்சுக்கள்.
வரிசை படுத்தவில்லை அது குறையும் இல்லை.
உன்னோடு நடந்த ஈர மணல் தடங்கள்.
தள்ளாடும் வயதில் எனக்குள் உள்ளாடும்.
கல்லமில்லா மழலை பாதம்.
கண்டு மகிழ்ந்தது என் மனம்.
அலைகள் தழுவும் கடல் கரையில் தேடுகிறேன்.
ஊன பிறவியாய், உள்ளுக்குள் குறை.
கடல் நுரையும் முறையின்றி கரைத்தன.
மகளின் கைபிடித்து மண்ணில் நடைப்பழகினேன்.
வயது பல கடந்தும் வந்து வந்து போகிறேன்.
அன்று அலைகள் ஒன்றைச் சொன்னது.
உங்கள் இருவர் பாதச்சுவடுகளை அழித்து பாவியானேன்.
உன்னை போல் நானும் தேடுகிறேன் அந்தப் பாதம் சுவடுகளை.
ஒவ்வொரு நாளும் கரையில் வந்து கலங்கித் திரும்புகிறேன்.
அலையும் நானும் ஆறுதல் சொல்லி இழைப்பாறிய நாட்கள்.
கண்ணுக்குள் கண்ணீர் துளிகளாய் கலந்தன.
இப்படி மறுநாளும் இது தொடர்ந்தன.
ஈர மணலில் கரைந்த பாதத்தை தேடி நானும் அலைகளும்...