உயிருள்ள விதையினிலே
உன்னைப்போல்
நானிருந்தேன்
பத்துமாத காலம்வரை
எனக்கில்லை இளந்தளிரே
மண்ணிலே தூவிவிட்டு
கண்திறந்து பார்த்துநின்றான்
மண்ணைத் துளைத்திங்கு
மகப்பேறு நடந்ததிங்கு
எல்லாரும் ஒன்றாக வளர்ந்து மகிழ்ந்திருந்தோம்
தினம்தினம் நானும்வந்து
வளர்ச்சியைப்
பார்த்திருந்தேன்
பகிர்தல் நல்லதுதான்
இடைவெளி சிறந்ததுதான்
கட்டுக்கட்டாய் நாற்றுகளைக் கட்டிவைத்தோம் நாங்களுமே
செழித்து வளரவேண்டி
பிரித்து நடுகிறோமே
இளந்தளிர் நாற்றை
எடுத்தது இளந்தளிர்
நெல்விளைஞ்சி செழிக்க
நிற்கும் இளநாற்று
வளரும்போது தெரிய
விவசாய பூமிநமது
நன்றுநன்று தளிரே
நாடுபோற்றும் தானே
-பானுமதி நாச்சியார்