tamilnadu epaper

நிலவுக்கோர் சிபாரிசு"

நிலவுக்கோர் சிபாரிசு"

தங்கத் தாம்பாளமாட்டம்
தகதகக்கும் வெண்ணிலாவே!

தேய்பிறை வளர்பிறை 
தேவையா உனக்கு?

மாசம் பூராவும் 
முழுசாவே வந்திடு!

தோட்டம் முச்சூடும் 
வெளிச்சத்தைக் கொட்டிடு!

பகலுக்கு சூரியனும் 
இரவுக்கு முழுநிலவும்

எப்பவும் இருந்துட்டா 
இருட்டெல்லாம் ஓடிப்போகும்!

திருட்டேதும் இருந்திடாது
தைரியமே வந்து சேரும்!

சாமிகிட்ட சிபாரிசு 
போகணுமா நீ சொல்லு!

உனக்காக நாங்கேட்டு 
ஒத்தாசை செய்யுறேன்!

நாளெல்லாம் பௌர்ணமி 
நனவாகட்டும் இனியாச்சு!
------------

 முகில் தினகரன் கோயம்புத்தூர்.