*நுழைவுக் கட்டணம்*
பள்ளிக்கும் நுழைவுக் கட்டணம்
கல்விக்கும் நுழைவுக் கட்டணம்
தேர்வுக்கும் நுழைவுக் கட்டணம்
போட்டித் தேர்வுக்கும் நுழைவுக் கட்டணம்
சாமி தரிசனத்திற்கும் நுழைவுக் கட்டணம்
கேளிக்கை அரங்கிற்கும் நுழைவுக் கட்டணம்
பயணத்திற்கும் நுழைவுக் கட்டணம்
பொதுக் கழிவகத்திற்கும் நுழைவுக் கட்டணம்
மகிழுந்துக்கும் நுழைவுக் கட்டணம்
புகைவண்டிக்கும் நுழைவுக் கட்டணம்
வானூர்திக்கும் நுழைவுக் கட்டணம்
மயானத்திற்கும் நுழைவுக் கட்டணம்
பிறப்புச் சான்றிதழுக்கும் நுழைவுக் கட்டணம்
இறப்புச் சான்றிதழுக்கும் நுழைவுக் கட்டணம்
தகனம் செய்யவும் நுழைவுக் கட்டணம்
மரித்தாலும் விடாது துரத்தும் நுழைவுக் கட்டணம்
*ஆர். ஹரிகோபி, புது டெல்லி*