சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடெமி சமுதாய கல்லூரி மற்றும் குளோபல் மிஷின் மருத்துவமனை சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.இந்த வேலை வாய்ப்பு முகாமில் VDGDA ( நர்சிங் பிரிவு) 2025-2026ஆம்ஆண்டில் முடித்த 102 மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் 52 மாணவிகளை குளோபல் மிஷின் மருத்துவமனை சேர்ந்த விவேக் தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் வரவேற்றார்.நிகழ்சிக்கான ஏற்பாடினை கல்லூரி ஆசிரியர்கள் பூவிழி, சாந்தி, ஆனந்தி ஆகியோர்கள் செய்தனர்.