விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி மாதத் திருவிழா செவ்வாய்க்கிழமை 18ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி பதினோறு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா ஒன்பதாம் நாளான நேற்று புதன்கிழமை திருத்தேரோட்டத்தை பக்தர்கள் பொதுமக்கள் அரோகரா கரகோசம் எழுப்ப தேரை வடம்பிடித்துதேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருத்தேரோட்டத்தினை தொடர்ந்து நாள் முழுவதும் வெயில் உச்சத்தில் இருந்தாலும் பக்தர்கள் காவடி எடுத்தும் மொட்டை அடித்தும் நேர்த்திக்கடனை செய்தனர் அறுசுவை விருந்துடன் பலர் அன்னதானம் வழங்கினர் .