படித்திடு கண்ணே படித்திடு!
அன்றைய பாடத்தை அன்றே படித்திடு!
புரிந்து பாடத்தைப் படித்திடு!
நினைவில் பதியும்வரை படித்திடு!
தேர்வுக்கு முன்னே படித்திடு!
நிறைவாக அனைத்தையும் படித்திடு!
எழுதிப் பார்த்துப் படித்திடு!
மறக்காமல் இருக்கும் உணர்ந்திடு!
சொல்லிப் பார்த்துப் படித்திடு!
சொல்வதைக் கேட்டுப் படித்திடு!
தேர்வை திறம்பட எழுதிடு!
வினா எண் இட்டு எழுதிடு!
எழுதிய தேர்வை சரிபார்த்திடு!
மதிப்பெணை முழுமையாய் பெற்றிடு!
பெற்றிடு கண்ணே பெற்றிடு!
வெற்றிக் கனியை நீயும் பெற்றிடு!.....
க.ஜெயா சுரேஷ்,
வேம்பார்.