tamilnadu epaper

பழைய அமுதம்

பழைய அமுதம்


தினமும் மாலையில் ஒரு உழக்கு சாதத்தை கொஞ்சம் குழைசலாக வடித்து நன்கு ஆறியபின் இரவில் கொஞ்சம் தயிரும், கல் உப்பும் போட்டு பிசைந்து அமுக்கிவிடவும். தட்டை போட்டு மூடிவைத்து விடுங்கள்.


காலையில் ஒரு மிக்ஸி ஜாரில் எட்டு சாம்பார் வெங்காயம், கொஞ்சம் புதினா இலைகள், ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ளவும்.


இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாய் சாதத்தை போட்டு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.


இதனுடன் தண்ணீர் அல்லது கடைந்த மோர் சேர்த்துக் கொள்ளவும்.

கொத்துமல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.


விருப்பமானால் ஏதேனும் ஊறுகாய், வறுத்த மோர் மிளகாயோடு பருகுங்கள். எத்தனை இலகுவாக குளிர்ச்சியாக இருக்கிறது பாருங்கள்.


இந்த அளவுகள் நான்கு பேர் அருந்தலாம் (சாப்பிடலாம்). நீங்களும் செஞ்சு சாப்பிட்டு அக்கம் பக்கத்து வீட்டாருக்கும் சொல்லுங்களேன். கோடைக்கேற்ற கொடை அல்லவா!


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்.