கொழும்பு, ஏப். 7–
இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு அதிபர் அநுரகுமார திசாநாயக நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். ஜனாதிபதி மாளிகையில் இந்த விருந்து நடந்தது. பிரதமர் மோடியை வரவேற்ற இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக," நாங்கள் விருந்தோம்பலை விரும்பும் மக்கள், அனைத்து விருந்தினர்களையும் நாங்கள் அன்புடன் அரவணைக்கிறோம்" என்று குறிப்பிட்டார். நரேந்திர மோடியின் சிறந்த ஆரோக்கியத்திற்கும், இந்திய மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், செழிப்பிற்கும், நமது இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் ஒத்துழைப்பு தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விருந்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.