tamilnadu epaper

புது விடியல்

புது விடியல்

கடலிலிருந்து 
எழுந்துவரும் அலைகளில்
இசை கேட்கிறேன்…

காகத்தின் குரலிலிருந்தும்
சேவலின் கூவலிலிருந்தும்
கோவிலின் மணியிலிருந்தும்
பறவையின் சிறகசைப்பிலிருத்தும்
வீசும் காற்றிலிருந்தும்
சோலைகளின் வாசனையிலிருந்தும்
ஆலைகளின் ஓசைகளிலிருந்தும்
இசை கேட்கிறேன்…

இரயிலோடும் தண்டவாளங்களிலிருந்தும்
என்னென்னவோ சொல்லித் துடிக்கும்
இதயங்களிலிருந்தும்….
விடியலில் பரவும் மெல்லிய வெளிச்சக் கீற்றிலிருந்தும்…

பாகுபாடேதுமின்றி
மனதைத் தாலாட்டித் தட்டிச் செல்கிறது இசை..

இசையின் வானம் இன்னும் விரிந்து கொண்டே செல்ல …

கேட்டுக்கொண்டே பிறக்கிறது 
எல்லோருக்காவும்
ஒரு புது விடியல்
•••••••••••••••
கவிஞர் ம.திருவள்ளுவர்