சுக்கிரன் - பணம், செல்வம், கன்னம், மனைவி, மகள், கருப்பை, வாகனம், வீடு
சந்திரன் - கைவிட்டு பறிபோதல்
சுக்கிரன் என்பது பெண்ணின் கன்னங்களை குறிக்கும். கண்களில் இருந்து வரும் கண்ணீர் சந்திரனை குறிக்கும்.
ஆகவே தன் மனைவியை அல்லது மகளை அல்லது வீட்டில் வசிக்கும் பெண்களை, அடிக்கடி அழுது கண்ணீர் விட வைக்கும் ஆண் வசிக்கும் வீட்டில், சுக்கிரன் + சந்திரன் இணைவு உருவாகும். இதனால் அந்த வீட்டில் வசிக்கும் நபர்களின் கைகளில் செல்வம் தங்காது. வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் விற்கும் சூழல் உருவாகும். அந்த வீட்டில் கருகலைதல் அல்லது புத்திர தடை உருவாகும்.
பரிகாரம் - பெண்களை அடிக்கடி அழவைக்காமல் இருத்தல்.