தடுக்கி விழுந்தால் " பைக் ஆட்டோ ஸ்டாண்ட் "
தெருக்களில் பலஉண்டு இங்கு.
முடுக்கெல்லாம் பறந்து சென்று நம்மைச்
செல்லுமிடம் கொண்டு சேர்க்கும் .
நம்மூர் ஆட்டோ கட்டணம் தானெனினும்
நம்பி அனுப்பிடலாம் பள்ளி செல்ல.
குழந்தைகளுக்கும் பெற்றோர்க்கும் பேருதவி !!
சீருடை உண்டு "பைக்"ஓட்டுநர்க்கு
அரசின் உரிமமும் உண்டு !
சீருடையில் எண்ணும் அடையாளம் !!
நம்நாட்டு ஆட்டோ எண்போல.
பேங்காக்கில் "பைக்"ஆட்டோக்கள் !!
மெட்ரோ ரயில் படிகளருகிலிருந்தும்
மென்மையாய்ப் பறந்து செல்லும் !!
மெட்ராஸ்காரனுக்கு பைக் ஆட்டோவும்
மயக்கும் தந்திடும் வேடிக்கைதான் !!
சண்முக சுப்பிரமணியன்
பேங்காக்,தாய்லாந்த்