மணம்
விரும்பாத
மலர்
உண்டோ
தாய்மை
விரும்பாத
பெண்மை
உண்டோ
பத்து
வருடங்கள்
ஆகியும்
பத்து
மாதங்கள்
ஓர்
உயிரை
சுமக்க
வழியில்லை
சோதனை
குழாயும்
கடவுளைப்
போலவே
சோதிக்கிறது
வாடகை
தாயும்
திருப்தியில்லை
தத்து
வேண்டாமென
குடும்பம்
போதிக்கிறது
குழந்தை
பிரச்சனை
இவள்
ஒருத்திக்கு
சொத்து
பிரச்சனை
உடன்
பலருக்கு
குழந்தை
விடவும்
ஒரு சொத்து
உண்டோ ?
வெறும்
வயிற்றை
எத்தனை
நாள்தான்
இவள்
தடவுவது
பால
கணபதியை
வேண்டுகிறாள்
பால
முருகனை
வேண்டுகிறாள்
பால
கிருஷ்ணனை
வேண்டுகிறாள்
இவளுக்கும்
ஓர்
பாலகன்
வேண்டுமென்று
கருவறை
வாசம்
கடவுளுக்கு
தெரியாதா
பூவுலகில்
பூவாய் மலர்ந்து
மணம் வீசிய
இவளுக்கும்
ஒரு
பூ மலர்ந்து
மணம்
வீச வேண்டாமா ?
மணம்
விரும்பும்
மலர்கள்தான்
இவர்களும்
மணம்
இல்லாத
மலர்களை
யாரும்
சூடுவதில்லை
இந்த
மலர்களுக்கும்
மணம்
எப்போது
வரும்
இந்த
மனங்களை
வாசிக்க
இந்த
மணங்களை
சுவாசிக்க
யார்தான்
வருவார்....?
ஆறுமுகம் நாகப்பன்