காலையில் மனிதன்
மாலையில் மிருகன்
பகலும் இரவும் மாறுவதைப் போல்
மாறிக் கொண்டே இருப்பான்... இவன்
மாறிக் கொண்டே இருப்பான்...
காற்றில் மிதந்திடுவான்
கயிற்றில் நடந்திடுவான்
மயக்கத்தில் உருண்டு
மானத்தை இழந்திடுவான்.. தன்
மானத்தை இழந்திடுவான்...
சட்டம் இல்லை திட்டம் இல்லை
சமரசம் எனும் வட்டம் இல்லை
ஊரார்க்கு புத்தி சொல்ல முன்னே நிற்பான்...
தனக்கெவரும் புத்தி சொல்ல ஓட்டம் பிடிப்பான்...
மொட்ட மாடி மேலே நின்று நீச்சல் அடிப்பான்...
குட்டிக் கரணம் போடு வதாக கீழே குதிப்பான்...
ஆட்டமாடி கீழே விழுந்தும் திருந்த மாட்டான்...
புத்தி சொல்ல வந்தவரையே இவன் திட்டி தீர்ப்பான்... !
பகலும் இரவும் மாறுவதைப் போல்
மாறிக் கொண்டே இருப்பான்... இவன்
மாறிக் கொண்டே இருப்பான்...!
- துரை சேகர்
கோவை.