வாழ்த்துக்கள் !
மனிதா!
காசு பணமெல்லாம
காலத்தில்
கறைந்துவிடும்.
வாழ்த்து ஒன்று
மட்டுமே
வானம் தொடவைத்து
அழகு பார்க்கும்.
வாழ்த்து எனப்படுவது
உதட்டிலிருந்து
உதிர்ப்பதல்ல
உள்ளத்திலிருந்து
ஊறிவந்து
உதட்டிவைத்து
உற்சாகப்படுத்துவது.
மறந்தும்
கர்வத்தோடும்
பொறாமை
எண்ணத்தோடும்
வாழ்த்தி விடாதே
உனது
முன்னேற்றத்திற்கு
அதுவே
முட்டுக்கட்டையாய்
அமைந்துவிடும்.
அதனால்
நல்லதை நினைத்து
நலமுடன் வாழ்த்து
உனது வெற்றி
உச்சம் தொட வைக்கும்!
கே.எஸ்.ரவிச்சந்திரன்
மணமேல்குடி.