tamilnadu epaper

மன்னார்குடி ஶ்ரீ ராஜகோபால ஸ்வாமி வெண்ணெய் த்தாழி திருவிழா

மன்னார்குடி ஶ்ரீ ராஜகோபால ஸ்வாமி வெண்ணெய் த்தாழி திருவிழா

- ஆனந்த் ஶ்ரீனிவாசன்.


மிகவும் பிரசித்தி பெற்றது மன்னார்குடி ஶ்ரீ ராஜகோபாலன் பங்குனிப் பெருவிழா .


இந்தக் கோயிலில் ஶ்ரீ மணவாள மாமுநிகளுடைய நியமனப்படி அனைத்து விழாக்களும் ஶ்ரீ பாஞ்சராத்ரா ஆகம வல்லுனர்கள். ஆன தீக்ஷ்தர்கள் எனப்படுவோரால் நடத்தப்பட்டு வருகின்றன.


திருவிழா 18, பலவித வாகனங்கள் உடன் 18 நாட்கள் மட்டுமன்றி அதற்கு மேல் 12, நாட்கள் விடையாற்றி உத்சவமும் நடைபெறும் ஒரே திவ்ய ஷேத்திரம் இந்த மன்னார்குடி மட்டும் தான்.



18. நாட்கள் உத்சவத் தில் 32 திருகோலங்களில் ராஜகோபாலன் சேவை சாதிப்பார்.



18, ம் நாள் பங்குனி ரோஹினி நட்சத்திரம் அன்று திருத்தேர்.



17ம் திருநாள் ராஜகோபாலன் வெண்ணெயை திருடி சாப்பிடும் பாலகோபாலனுடைய திருக்கோலம்.



02/04/25 இன்று மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா.18 நாள் உட்சவத்தில் மற்ற திருவிழாக்களை ஒதுக்கி வைத்துவிட்டுக் கம்பீரமாக இருக்கும் திருவிழா.


மற்ற திவ்யதேசங்களில் நீங்கள் இந்த வெண்ணெய் தாழி உத்சவத்தைச் சேவித்து இருக்கலாம். ஆனால் மன்னார்குடி வெண்ணனைதாழி உற்சவம் மட்டுமே சிறப்பு.


“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்டவாயன்

என்னுள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோனணியரங்கன்

என் அமுதினைக் கண்ட

கண்கள் ....மற்றொன்றினைக் காணாவே!


திருப்பாணாழ்வார் பாசுரம் படி கோபாலன் அழகை

சேவிக்கிறோம்.


கோபாலன் மேனியில் வெண்ணெய் அடிப்பது பெருமை மிகு விசயம்.

.

சிறியவர் முதல் பெரியவர் வரை கோபாலனுக்கு வெண்ணெய் சமர்பிப்பது ஐதீகம்.யாதவக் குல மக்களுக்காகக் கோபாலன் வெண்ணெய் உண்ணும் விழா.இந்த வெண்ணெய் தாழி திருவிழா.


ஆனால் ஒரே நேரத்தில்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில், பூவரசு இலையில் வெண்ணெய் விற்பவர்களிடம் வெண்ணெய் வாங்கி அந்தக் கூட்டத்தில் கோபாலன் மீது அடிப்பது என்பது ஒவ்வொரு பந்துளையும் sixer அடிப்பது போல் உணர்வு.


கோபாலன் மேனி முழுவதும் வெண்ணெய்.! கோபாலன் மேனி மட்டுமா வெண்ணெய்?!. கோபாலனுடன் கூடவேசேர்ந்து வரும் அர்ச்சகரும் வெண்ணெய் குளியல் தான். அவர் உடம்பு மூக்குக் கண் காது கை நெற்றி முழுவதும் வெண்ணெய் மழை தான்.


அவர் பிரசாதமாகப் பக்தர்களுக்குப் பூவரசு இலையில் வந்த பிரசாதத்தைக் கொத்து கொத்து ஆக எடுத்துவெண்ணைப் பிரசாதம் எடுத்துத் திரும்பப் பக்தர்களுக்குக் கொடுக்கும் போது எங்கிருந்தோ வந்தஅம்பு மாதிரி பக்தர்களின் வெண்ணெய் அவர் மேல் வந்து விழும்.


காண கிடைக்காத காட்சி; கண் கொள்ளா காட்சி.

பெருமாள் நவநீத கிருஷ்ணன் ஆக 20 லிட்டர்க்கு மேல் பிடிக்கும் வெள்ளி வெண்ணெய் குடத்தைத் தாங்கி ஒரு கால் முன்னும் இன்னொரு கால் பின் புறமும்அமர்ந்து அருள் பாலிக்கும் இந்தக் காட்சி இருக்கே அந்த அபூர்வ மான காட்சி," சொர்க்கமே ஆனாலும் நம் ஊர் கோபாலன் வெண்ணெய் தாழி போல ஆகுமா?"

என்று ஆயிரம் இளைய ராசா பாடுவது போல இருக்கும்.


இந்த வெண்ணெய் தாழி உடசவத்தில் ஒரு ஸ்பூன் கூட இல்லாத வெண்ணையை 10 ருபாய் க்கு விற்றுக் கொண்டு இருந்தார்கள்.


"என்னப்பா? இவ்வ்ளவு விலை சொல்ற? என்று பக்கத்து பெண்மணி ஒருவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போது நான் சொன்னேன் .இதுவும் கோபாலன் திருவுள்ளம் தான். இப்படிப்பட்ட ஏழை ஜனங்கள் இன்று இப்படி விற்றால் தான் அவர்கள் வாழக்கை படகு ஓடும் என்று கோபாலனுக்குத் தெரியும்


இது அநீயாயமில்லை. அவர்கள் இன்று ஒரு நாள் இப்படி விற்று பிழைக்கட்டுமே என்று கோபாலன் நினைக்கிறான்.என்று அவரைச் சமதானப்படுதினேன்.

.


7 மணி கோயில் உள்ளே போய்ப் புறப்பாடு ஆகும் .நேரத்தில் சேவிக்கபோனால்

இந்த வருடம்

பார்த்தால் 7 மணிக்கே 700 க்கு மேல் பக்தர்கள் காத்துண்டு இருந்ததைப் பார்த்தும். . கோபாலன் மீது எல்லோருக்கும் இவ்வளவு ஆசையா.. என்கிற கேள்வி எழுந்தது.


ஶ்ரீ ராஜகோபாலன் புறப்பாடு க்கு முன் செண்டை மேளம் ஆர்ப்பாட்டம்.



நிறைய வருடங்களில் கோயில் இருந்து வெண்ணெய் தாழி மண்டபம் வரைக்கும் கோபாலன் அழகில் மயங்கி அவர் பல்லக்குடன் பின்னாடியே மக்கள் தொடர்ந்து செல்வார்கள்..


அப்படித்தான் எவ்வளவு முறை பார்த்தாலும் அடஙகாது அந்த ஆசை.


வெறும் காலுடன் வென்னைத்தாழி மண்டபம் பவரை சென்று மன திருப்தி ஏற்பட்டதும் மக்கள் கூட்டம் களையும்.


கோயிலில் இருந்து வெண்ணெய்தாழி . மண்டபம் வரை. உள்ள கடைகளில் நம் கையைப் பிடிக்காத குறையாகப் பானகம் சாப்பிடுங்கள் நீர் மோர் சாப்பிடுங்கள் என்று சொல்லும் பாங்கே தனி. இதைத் தவிர்த்து உணவு பொட்டலங்கள் வேறு.



இந்த வெண்ணைத் தாழி உத்சவ மாலையில் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி. அலங்காரம் .ஶ்ரீ ராஜகோபாலன் ஒற்றை வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கையில்.

துலாக்கோல் ஒன்று ஏந்தியிருப்பார்.



அன்று மாலை 0630 மணி அளவில் குதிரை வாகனத்தில் வையாளி சேவை. இந்த மண்டபம் எதிரில் உள்ள செட்டித் தெருவில் கிட்டத்தட்ட ஒரு மைல் நீளம் உள்ள தெருவில் மூன்று முறை வையாளி சேவையில் அருள் பாலிப்பார்.


இரவு 7மணிக்கு கள்ளர் மண்டகப்படி தங்க குதிரை வாகனம் .செட்டி தெரு மூன்று முறை போய் வந்தவுடன் நேரே திருப் பாற்கடல் மண்டபம். இரவு 9 மணி . இதோ வானவேடிக்கை கண் கொள்ளா காட்சி.

வெண்ணைதாழி மண்டபம் புறப்பாடு போதும் சரி. பாற்கடல் மண்டபம் புறப்பாடு போதும் வான வேடிக்கை அற்புதம்.



18, ம் நாள் பங்குனி ரோஹினி நட்சத்திரம் அன்று திருத்தேர்.தேசிய மேல்நிலை பள்ளி மாணவர்கள் மூலம் தேர் இழுக்கப்பட்டுகிட்டத்தட்ட 70வருடத்துக்கு மேல் இந்த நடைமுறை. தேர் நான்கு வீதிகள் வலம் வந்து பின்பு நிலைக்கு வரும்.


ஆனால் என்னை விட வயதானவர்கள் சேவிக்க வந்து இருக்கும் போதுஅந்த அளவு கோபாலன் மீது அவர்களுக்குத் தீவிர காதல். என்று தானே சொல்ல வேண்டும் .


கோபாலன் தண்டை யுடன் வளைந்த கால் .அவன் புன்னகை மறக்க முடிய வில்லை.

ஏன் ஏன்?