tamilnadu epaper

மரணம் எவ்வளவு நீளமானது

மரணம் எவ்வளவு நீளமானது

உன் வீட்டுக்கான சாலை போல்❤️

படுக்கையில் ஒத்திகை நிகழ
மரணம் ஒரு பிரளயமாகிப்போகிறதே❤️

உன்னுடன் சங்கமிக்கும் நொடிகளில்
இறப்பின் துளிகளை இழந்துபோகிறேன்❤️

வாழ்க்கையின் மொத்த காலமும்
மரணத்தின் கணக்கில் கழிந்தே போகிறது❤️

உன்னிடம் கொண்ட என்காதல் பரிசென 
என்னை சபித்து மரணத்தை தருகிறது❤️

நீ தந்த நேசம் 
மரணத்துக்குள் உறைந்த ஜனனம்❤️

காமம் தந்த சுவைகளில் புரிகிறது
கசப்புக்குள் கசியும் இனிமை ருசியென்று❤️

ஜவஹர் பிரேம்குமார்❤️
பெரியகுளம்❤️