திருநெல்வேலி, ஏப். 1௦–
மியான்மர் பெண்ணை நெல்லை வாலிபர் காதல் திருமணம் செய்து கொண்டார்.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சுப்பிரமணியன். வியட்நாமில் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவருடன் மியான்மரை சேர்ந்த துகின் லீதாய் என்பவரும் வேலை செய்து வருகிறார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதால் கடந்த ௭ ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் நெல்லை டவுனில் உள்ள மண்டபத்தில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இரு வீட்டாரை சேர்ந்தவர்களும் திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மணமக்கள் மகேஷ் சுப்பிரமமணியன், துகின் லீதாய் கூறும் போது, ‘‘நாங்கள் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதுகுறித்து எங்கள் வீட்டாருடன் தெரிவித்து இரு தரப்பு சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டோம். தமிழ் பாரம்பரியம், கலாசார முறைப்படி இந்த திருமணம் நடந்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது’’ என்றனர்.