சர்வதேச டென்னிஸ் போட்டிக ளின் முக்கிய தொடரான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் (ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்டது) அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பிரிட்டனின் டிராப்பர் (6), செக் குடியரசின் மென்சிக்கை எதிர் கொண்டார். அதிரடிக்கு பெயர் பெற்ற டிராப்பர் 6-7 (2-7), 6-7 (3-7) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். டிராப்பர் கடந்த வாரம் நடைபெற்ற இந்தி யன் வேல்ஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவர். இதே இந்தியன் வேல்ஸ் ஓபனில் இறுதி வரை முன்னேறிய டென்மார்க்கின் ரூனே(11), அமெரிக்காவின் ரெய்லியிடம் 6-4, 3-6, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இதே போல ரஷ்யாவின் முன்னணி வீரரான ரப்லவ் (8) பெல்ஜி யத்தின் பெர்க்ஸிடம் 5-7, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். டிராப்பர், ரூனே, ரப்லவ் மட்டுமின்றி கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான அல்காரஸ் (ஸ்பெ யின்), மேத்வதேவ் (ரஷ்யா) உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இரண்டாவது சுற்றி லேயே தோல்வியடைந்து வெளியேறி னர். தியபோ (அமெரிக்கா), பில்ஸ் (அமெரிக்கா), டி மினார் (ஆஸ்திரேலியா) உள்ளிட்ட முன்னணி வீரர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். சீன வீராங்கனை அபாரம் மகளிர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜெங் (9), 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டவுன்சென்டை வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் காலின்ஸ், கவுப் ஆகி யோரும் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.