tamilnadu epaper

முடிவைத் தேடி முடிவில்லா பயணம்

முடிவைத் தேடி முடிவில்லா பயணம்

முடிவைத் தேடி முடிவில்லா பயணம் 

_________________________________

 

 

 

காதலை சொல்லவே இல்லை ..ஆனால் ஒரு நேசம் இருந்தது..

 

முத்தம் கேட்டதே இல்லை ஆனால் அப்படி ஒரு ஆசை இருந்தது.

 

சண்டை வந்ததே இல்லை

ஆனால் நிறைய மன வருத்தங்கள் இருந்தது.. 

 

பேசாமல் இருந்ததே இல்லை

ஆனால் சில நேரங்களில் அவசியமற்ற மௌனம் தான் நம்மை விலக வைத்தது.

 

விலக நினைத்தாலும் முடியவில்லை சேர நினைத்தாலும் வழி இல்லை..

 

சொல்லான்னா துயரங்களில் 

தூக்கமில்லா இரவுகளில்

நிரம்பி வழிக்கிறது கழிவிரக்கம்.

 

கேட்டுத்தான் பார்ப்போமே

சொல்லித்தான் பார்ப்போமே

யோசித்து யோசித்து 

 

முடிவில்.. இப்படியே இருக்கட்டும் என முடிவெடுத்தேன்..

 

இன்னும் இப்படியே போகிறது அந்த 

 பயணம்...முடிவைத் தேடி..

 

########

ஜனனி அந்தோணி ராஜ் 

திருச்சிராப்பள்ளி

9786455499