உலகில்
அனைவரும் அறிந்து
இருவர் அன்பில்
முதலில் பூக்கும் பூ பிறப்பு!
உலகில்
யாரும் அறியாமல் முடிவில்
ரகசியமாக பூமியில்
உதிரும் பூ இறப்பு!
உலகில்
அறிந்தும் அறியாமல் அழுதுகொண்டும்
சிரித்துக்கொண்டும்
மனிதநேயமுடன்
இடையில் வாழ்ந்து
வாழும் மணக்கும் பூ சிறப்பு!
கவிஞர் பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை சென்னை