tamilnadu epaper

மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா

மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி மாதம் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் பதினோர் நாட்கள் நடைபெறும்


கடந்த பங்குனி மாதம் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய விழா ஆலய பிரதட்சணம் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்றன 


அதனை அடுத்து எட்டாம் நாளன்று செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக நடைபெற்றது 


அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் நாள் புதன்கிழமை பங்குனி மாதம் 26 ந் தேதி மாலை 5 மணி அளவில் திருத்தேரோட்டம் வானவேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைபெறயுள்ளது


பத்தாம் நாள் வியாழக்கிழமை பங்குனி உத்திரம் தீர்த்த வாரிவிழாவும் 

பதினோறாம் நாள் வெள்ளிக்கிழமை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது 



தேர்த் திருவிழாவினை கான்பதற்க்கு ஆயிரம் கணக்கான னோர் உள்ளூர் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பொதுமக்கள் வருகை தருகின்றனர்


இந்தத் திருத்தலத்தில் மற்றும் ஓர் சிறப்பு நிகழ்வாக பிரதி மாதம் பௌர்ணமி நாளன்று பக்தர்கள் பொதுமக்கள் கிரிவலம் வருகின்றனர்