tamilnadu epaper

ரயில்

ரயில்

உன்
பார்வையிலேயே
என்
உயிரைத் தொடுபவள்
நீ!
உனக்காகப்
பட்டாசு வெடித்துத்
தீபாவளி கொண்டாடுவதை விட
எனக்கு
வேறேதும் மகிழ்ச்சி உண்டா?!
ஆருயிர் என்கிறாய்
ஓருயிர் என்கிறாய்
என்னுயிர் என்கிறாய்!
இப்படியாக
நீ
சொல்லும் போதெல்லாம்
தீபாவளி வரும் வரை காத்திராமல்
அப்பொழுதே ராக்கெட் விடும்
என்
மனசு!
ரயில் விடலாமா? என்கிறாய்!
மயிலும் குயிலும் இணைந்த அழகி
நீ
வினவுகையில்
ஒரு காதலனின் மனதிலேயே
ரயில் ஓடாதா என்ன?!
ஊரெல்லாம்
வருடத்திற்கொரு முறைதான் தீபாவளி!
ஆனால்
எனக்கோ
தினந்தோறும்
எந்த நேரமும்
உன்
கண்களில் தீப ஒளி!
?????????
❤‍?முத்து ஆனந்த்❤‍?
       ?வேலூர்?