தரகர் சொன்ன இந்த வரன் ரொம்ப நல்ல இடம் அண்ணே, எப்படியாச்சும் பேசி முடிச்சிடலாம்" என்றார் மாணிக்கம்.
குடும்பமாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். அம்மா பார்வதி, அண்ணன்" />
"தரகர் சொன்ன இந்த வரன் ரொம்ப நல்ல இடம் அண்ணே, எப்படியாச்சும் பேசி முடிச்சிடலாம்" என்றார் மாணிக்கம். குடும்பமாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். அம்மா பார்வதி, அண்ணன் இளங்கோ, அண்ணி சுகுணா, மனைவி சாந்தி, அண்ணன் மகன் ஆதித்யா எல்லோருமாக அருமை மகள் கலாவிற்கு வந்த வரனைப் பற்றித்தான் பேசலானார்கள். அம்மா, தன்னிடம் இருக்கும் ஆறு சவரன் இரட்டை வடம் சங்கிலியை மூன்று பவுன் கலாவிற்கும், மூன்று பவுன் ஆதித்யாவிற்கும் கொடுக்க விரும்புவதாக சொன்னாள். இடைமறித்த அண்ணன் "அதெல்லாம் வேண்டாம்மா, அத அப்பிடியே கலாவுக்கு போட்றலாம்" என்றார். "எங்கண்ணன் மூனு சவரன் நெக்லஸ் போடறேன்னு சொல்லுச்சு" என்றாள் சாந்தி. "நானும் அவ வயசுக்கு வந்ததுமே அவளுக்கு நகைச்சீட்டு கட்டிட்டு வர்ரேன், அதுல ஒரு ரெண்டு பவுன் வாங்கிரலாம்" என்றாள் அண்ணி சுகுணா. "அவளுக்கு வயசுக்கு வந்ததுமே நானும் சேத்து வைக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு அஞ்சு பவுன் தேரும்" என்றாள் சாந்தி. திருமண செலவுகள் குறித்து பேசும்போது ஆதித்யா சொன்னான், "கவல படாதீங்க சித்தப்பா, எதாச்சும் லோன் போட முடியுமானு பாக்கறேன்" என்றான். "அவசரப்படாத தம்பி வட்டிக்காசு, பேங்குல போட்டு வச்சது எல்லாம் கொஞ்சம் தேறும். முதலாளி கொஞ்சம் கடன் தர்ரேன்னாரு" என்றார் மாணிக்கம். "சத்திரம் மட்டும் கொஞ்சம் வசதியா பாத்துருவோம் தம்பி, புள்ள வீட்டுக்காரங்க நல்லா சௌகரியமா இருந்துட்டு போவட்டும்" என்றார் அண்ணன் இளங்கோ. கொட்டி கொட்டி அளந்தாலும் குருனி காணியாகாது என்பது போல பேசி பேசி மனதுக்குள் ஒரு திருமணத்தையே நடத்தி முடித்தார்கள். மறுநாள் தரகரிடம் சொல்லி பெண் பார்க்க வரலாம் என்று சொல்லிவிட வேண்டும். ஆவணியில் திருமணத்தை சீரும் ஊரும் உறவும் மெச்சும்படி சிறப்புமாக நடத்திவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பசிச்சவன் பழங்கணக்கு பார்த்தாற்போல் எங்கெங்கு எப்படியெல்லாம் பணம் புரட்டுவது என்று ஒரு வழியாக முடிவெடுக்கப்பட்டது. விடிந்ததும் செயலில் இறங்க எண்ணியவர்கள் இரவு மணி ஒன்றாகிவிட்டதால் தன்னை மறந்து அப்படியே மாணிக்கம் வீட்டின் ஹாலில் சோபாவிலும் கீழுமாக படுத்து உறங்கிப் போனார்கள். மணி ஆறு ஆகிவிட்டது. முதலில் சுகுணா எழுந்தாள். சாந்தியை எழுப்பினாள். சாந்தி எழுந்து, பொழுது நன்கு விடிந்து விட்டதே, ஏழரைக்குள் கலாவிற்கு எல்லாம் தயார் செய்ய வேண்டுமே என்று பரபரப்பாக எழுந்தாள். கலா போன வருடம் கல்லூரி படிப்பு முடித்து இரண்டு மாதங்களாக ஒரு கம்பெனியில் வேலைக்கு போகிறாள். கொல்லை கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியானாள் சாந்தி. பேச்சு சுவாரசியத்தில் கதவை சாத்த மறந்து விட்டோமே என்று வருந்தினாள். இந்நேரம் காபிக்கு பறக்கும் கலா கூட எழுந்திருக்கவில்லையே என்று அவள் அறைக்கு சென்று பார்த்தபோது அவள் அங்கில்லை. கொல்லை புறம், வாசல் பக்கம், மாடி என்று தேடினாள். எங்கும் கலா இல்லை. பதறிக் கொண்டு வந்தாள். "என்னங்க நம்ம கலாவை காணோங்க" என்று கதறினாள். மாநாடு முடிந்து தூங்கியவர்கள் எழுந்ததும் துயரத்தில் மூழ்கினர். ஆம் கலா காதலனோடு ஓடிவிட்டாள். அவளுக்கு இந்த உறவுகளை, பெற்றோரை விட காதல் பெரிதாக தெரிந்தது. இவர்களுக்கு வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அவமானத்தில் கூனிக்குறுகி போனார்கள். மூக்கை துடைத்து, நாக்கை துடைத்து, எத்தனையோ சகித்து அருமை அருமையாக வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய மகள் இன்று இவர்களை உதறி தள்ளிவிட்டு ஓடிப் போய்விட்டாள். காதலர்களே காதல் சிறந்ததா, தவறா சரியா தெரியவில்லை. பெற்றோர்களின் வலியும் வேதனையும், உறவினருக்கும் சேர்ந்து ஏற்படும் அவமானங்களும் மிகவும் கொடுமையானது. உணர்வீர்களா? -வி.பிரபாவதி மடிப்பாக்கம் Breaking News:
வட்ட மேசை மாநாடு