அன்புடையீர்,
வணக்கம்.23.4.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் 28 பேர் பலி என்ற அதிர்ச்சியான தகவலை முதல் பக்கத்திலேயே படித்து மனம் உடைந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையாக நல்ல நாளாக எனக்கு நல்ல செய்திகளை சொன்னது .
இன்றைய திருக்குறள் மிகவும் அருமை அதைப் பொருளுடன் படித்து புளாங்கிதம் அடைந்தேன். ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவிலில் மங்களா சாசனம் கோலாகலம் என்ற செய்தி மகிழ்ச்சியாக வைகுண்டத்தையே பார்த்தது போல உணர்ந்து ரசித்துப் பார்த்தேன். ஆஞ்சநேயருக்கு செந்தூரக் காப்பு மிகவும் அருமையாக இருந்தது. கண்களுக்கு குளிர்ச்சியும் மனதிற்கு மகிழ்ச்சியும் தந்தது .
நான் மிகவும் விரும்பி படிக்கும் நலம் தரும் மருத்துவம் பகுதி இல்லாமல் ஏமாற்றமடைந்து பலமுறை திருப்பி திருப்பி பார்த்தேன். சென்னையில் மாற்றுத் திறனாளிகள் குண்டு கட்டாக கைது என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. திண்டுக்கல்லில் நாளை மின்தடை என்று முன்னெச்சரிக்கையாக இருக்க உதவியது பாராட்டுக்கள்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பெரிய காலாடி வரலாறு மிகவும் அருமை புதுமையான தகவலாகவும் இருந்தது பாராட்டுக்கள்.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த விடுகதை மிகவும் வருகை அருமை . மஹா பெரியவா அருள்வாக்கு ஒவ்வொரு வார்த்தையும் படிக்கும் போது உடலும் உள்ளமும் புல்லரித்தது .
அழகிய நகர் உச்சினி மகாகாளியம்மன் கோவில் கொடை விழாவில் பால் குட ஊர்வலம் மிகவும் அருமையாக இருந்தது டாக்டர் சாந்தா அம்மையார் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் என்று மிக அருமையான தகவலை சொன்னது பாராட்டுக்குரியது .
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது இதனால் தமிழ்நாடு கோடையில் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் மிக மகிழ்ச்சியுடன் இருக்கும்.
மதுரையில் ஆட்சியர் இல்லத்தின் முன்பு இரண்டாவது நாளாக மகனுடன் போலீஸ்காரர் மனைவி தர்ணா என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது அவர்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதுக்குள் இறைவனை பிரார்த்தித்தேன். சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு என்று ஜனநாயக படுகொலை என இபிஎஸ் காட்டமாக சொன்னது இன்றைய அரசியலை மிக அழகாக படம் பிடித்து காட்டியது.
அமெரிக்காவில் விமான விபத்து அதனால் நாலு பேர் பலி என்ற செய்தி அதிர்ச்சியுடன் படித்தேன். தமிழகத்திற்கு கடத்த முயன்ற 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் இலங்கையில் இருவர் கைது என்ற செய்தி மிகவும் பயங்கர செய்தியாக எண்ணி படித்தேன்.
20 பக்கங்களிலும் அருமருந்தாக நோயை தீர்க்கும் நல்ல செய்திகளை அழகாக தொகுத்து கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் சின்சியரான ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்