tamilnadu epaper

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-23.04.25

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-23.04.25


சமூக விடியல் வெளிச்சத்திற்கு சக்தி மிக்க ஒளியாய் நித்தம் மலர்ந்து ஜொலிக்கும் தமிழ் நாடு இ பேப்பருக்கு 

நெஞ்சார்ந்த வாழ்த்தும் வணக்கமும்...


ஜம்மு -- காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை

ஈவிரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் செய்திக்கு முக்கியம் அளித்தது ஊடக முதிர்வின் முத்திரை.

என்று தீரும் இந்த வன்முறை அநியாயம்?

UPSC தேர்வில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23--

ஆம் இடமும் மாநில அளவில் முதலிடமும் பெற்றமைக்கு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம். அர்த்தமுள்ள ஆனந்தம்!

சவுதி அரேபியா பயணத்தில் இருக்கும் பிரதமர் மோடி காஷ்மீர் செய்தியின் கடுமை உணர்ந்து அவசர அவசரமாக தாயகம் திரும்புவதை தனி உயர்த்தில் வெளியிடப்பட்டது நுட்பத் தரம்!

அடுக்கடுக்கான ஆன்மிகச் செய்திகள் வாசக உள்ளங்களுக்கு உரமும் ஊக்கமும் அளிக்க வல்ல ஆத்ம பலம். நெஞ்சார்ந்த நன்றிகள்.

சித்திரை திருவிழா நாட்களில் மது பானக் கடைகளை மூடக் கோரிய மனுவை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிரிக்கவா? சிந்திக்கவா?


சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு சற்று பரபரப்பை உண்டு பண்ணி யுள்ளது உண்மை தான். ' எதிரியின் முகம் மாறியுள்ளது. எண்ணம் மாற வில்லை.' எதுகை மோனையில் ஏக குஷியில் பேசி, கலைஞரின் நினைவலைகளை மீட்டுகிறார் ஸ்டாலின்.

சபாஷ்... சபாஷ்!

பாஜக கூட்டணி தகைந்ததற்குப் பிறகு 

எடப்பாடியார் புத்துணர்வும் புதுத்தெளிவும் பெற்றுள்ளதை தமிழகமே அறியும்.

வரும் 25--ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமாமே! தொண்டர்களை உசுப்பேற்றும் காரியங்கள் இனி தொடரும். வாழ்த்துகள்!

உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.

அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிக் கைது... இதற்கு மாற்று ஏற்பாடு இல்லையோ?

கோவை மாநகராட்சி கழிவறையில் எழுதியிருந்த தலைவர்கள் பெயர் அழிப்பு. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.

ஆரோக்கியமான அழிப்பு! இது தொடரட்டும் தேசமெங்கும்.

பா.ஜ.அலுவலகங்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உரிய பாதுகாப்புக்கு உறுதி வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்தி, உஷார் அரசியலை அரங்கேற்றுகிறார்,

மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.


டாஸ்மாக் மது விற்பனையால் அரசுக்கு 48344 கோடி வருவாய் என்ற செய்தி பரவசம் தரவில்லை.

பதை பதைக்க வைக்கிறது என்பது தான் நிஜம்.

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமோ?

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் --

சென்னை ஐகோர்ட் உத்தரவு, செவிலியர் செவிகளுக்கு தேனின்பம் அன்றோ?

பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்கள்... மகத்தான மருத்துவ சேவை மனதுக்கு இதமாக இருக்கிறது. சபாஷ்...

சபாஷ்!

முகில் தினகரனின் சர்வாதிகாரி சிறுகதை,

ஜனரஞ்சக ரசனையில் அள்ளுகிறது.

ராதா பாலுவின் இன்னா செய்தாரை படைப்பு இதயத்துக்கு இனிப்பு.வாழ்த்துகள்.

உலக புத்தகங்கள் தினம் கட்டுரை உண்மையான விழிப்புணர்வுக்கு வழி வகுக்கிறது.

நூலறிவு வசப்பட்டால் வாலறிவும் வசப்படும் 

வாழ்க்கை வளமாய் செழிக்கும்!

கவிதைகள் அனைத்தும் அட்டகாசம் மட்டுமல்ல... அனுபவ

விளைச்சல்கள்!

வாசகர் கடிதம் வசந்த சுகம் தருகின்றன.

குழந்தைகள் கை வண்ணம் குதூகலக் களஞ்சியமாக ஜொலி ஜொலிக்கின்றன.


மொத்தத்தில் தமிழ் நாடு இ பேப்பரின் மலர் இதழ்களில் மார்க்கண்டேய வரம் வாங்கிய இளமையின் சாம்ராஜ்யம் கம்பீர மணத்தில் தூக்கலாய் மிளிர்கின்றன.

வாசகப் பெருமக்களின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!



நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர் 

தென்காசி மாவட்டம் 

9791667528