ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாகவும் கண்மூடித்தனமாகவும் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் 28 பேர் பலியாகி இருக்கிறார்கள். பலரும் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
ராணுவ உடையில் ராணுவ வீரர்களை போல வந்தவர்கள்தான் இந்த படுகொலைகளை செய்து இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகளின் மதத்தை கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு கொலை செய்திருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவின் பங்கு மகத்தானது. குறிப்பாக காஷ்மீரில் உள்ளவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் ஏதாவது ஒரு வகையில் சுற்றுலாவை நம்பி வாழ்கிறார்கள். தீவிரவாதம் தலை விரித்து ஆடிய காலத்தில் கூட சுற்றுலா பயணிகளை யாரும் தொடாமல் இருந்தார்கள்.
அவர்களுக்கு சோறு போடுபவர்களே சுற்றுலா பயணிகள் தான் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.
இதன் பிறகு நிச்சயமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. அப்போது சுற்றுலாவை நம்பி இருக்கும் குடும்பங்கள் இக்கட்டான சூழலை சந்திக்க நேரிடும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது வெளிநாட்டு பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்புகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீருக்கு விரைந்து இருக்கிறார்.
வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய காலகட்டம் இது,
மனதளவில் தீவிரவாதிகளை ஆதரித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அப்போதுதான் அது புரியும்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் கோடை விடுமுறையில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய வேலைகளை குறிப்பிட்டு இருப்பது அருமை. அத்துடன் தங்கள் குழந்தைகள் மொபைல் போனுடன் ஐக்கியம் ஆகாமல் அவர்களை வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடச் செய்வதும் பெட்ரோரின் கடமையாகும்.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்