கருவறையில் நீ துளிர்த்தாய்...
கவலைக் கடலில் நான் தவித்தேன்!
ஆண்மகனோ? பெண்மகளோ? என
ஆணாக நீ இருந்திருந்தால்
அன்றே முடிந்திருக்கும்
இப்பிறவியின் பெரும் பலன்!
ஆனால்...
நீயோ அழகிய பெண்ணாகப் பிறந்து
என் பெண்மைக்கே பெருமை சேர்த்தாய்!
ஏனென்றால்...
மீண்டும் ஒரு கருவறையில்
உன் மகளாகப் பிறக்கும்
வரம் பெற்றேனல்லவா நான்!
"அம்மா" என்று நீ அழைத்த நொடியில்
ஆனந்தத்தில் என் இதயம் துடித்ததே!
அகிலத்தில் இதற்கு ஈடான சொல் ஏதும் உண்டோ???
-த.திவ்யா- சங்ககிரி