tamilnadu epaper

வெட்கம் இல்லா சிரிப்பு

வெட்கம் இல்லா சிரிப்பு


இலக்கியமாய் 

நயமாய்

சொல்லித்தான் வைத்தான்

அய்யன்

வள்ளுவன்

திருவள்ளுவன்


இடுக்கண்

வருங்கால்

நகுக...


ஆதலால்...


எனக்கு 

துன்பம் 

வரும் வேளையிலே

சிரிப்பதை 

போலவே...


பிறர்

துன்பப்படுகையிலும்

பொத்துக்

கொண்டு 

வந்து

விடுகிறது

இந்த

வெட்கம் கெட்ட 

சிரிப்பு...


'தொபுக்குடி' ன்னு

எதிர் பாராது

விழுகையில்...


ஏடாகூடமாய்

'டபக்கு'ன்னு 

மோதி 

விழுகையில்... 


இப்படி 

நடந்ததை

நினைத்து

எழுதுகையில்...


இப்பக்கூட...


இதை

நினைத்து 

நினைத்து 

எழுதுகிற பொழுது

சிரிப்பு

வந்தது போல்...


இதை

படித்து 

படித்து 

நினைக்கிற பொழுது

உங்களுக்கும்...


அதே

வெட்கங்கெட்ட

சிரிப்பு 

வந்து

தொலைத்தால்

என்னதான் 

பண்ணித்

தொலைப்பது...?


ஏய்...

வெட்கங்கெட்ட 

சிரிப்பே...

உனக்கு 

கொஞ்சம் கூட 

வெட்கமே 

இல்லையா

என்ன...?


எனக்கு 

மட்டும் 

 நகுகையில்

வருகிறது

இடுக்கண்...

என்ன செய்ய...


-ஆறுமுகம் நாகப்பன்