tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-03.05.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-03.05.25

 

அன்புடையீர்,


 வணக்கம் 3.5.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் வந்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நம் பிரதமர் மோடிஜி திறந்து வைத்த செய்தி அற்புதமாக இருந்தது . நாளை வரவிருக்கும் தெய்வம் இதழை படிக்க ஆவலாக காத்திருக்கிறேன். இன்றைய பஞ்சாங்கம் நல்ல நாளாக எனக்கு சனிக்கிழமை தொடங்க உதவியது.


திருக்குறள் மிகவும் அருமை பொருள் புரிந்து படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி என்ற படமும் செய்தியும் விளையாட்டு செய்தியை தெரிந்து கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்தது. மதுரையில் சுந்தரேஸ்வரரும் மதுரை மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த படத்தை பார்த்தவுடன் புல்லரித்தது.


போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்று அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் சொன்னது சரியான பேச்சு. இன்று ரூபாய் 6266 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வில்லை என்று ஆர் பி ஜே சொன்னது அதிசயமாக இருந்தது .


அரசியல். In. பகுதியின் அரசியல் செய்திகள் மிகத் தெளிவாக இருப்பதால் இன்றைய அரசியலை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. நலம் தரும் மருத்துவம் பகுதியில் இளம் வயது உடல் நல பிரச்சனைகள் என்ன என்பதை மிகத் தெளிவாக பட்டியலிட்டது பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் வரலாறும் அவருடைய புகைப்படமும் நல்ல அரிய அருமையான தகவல்.


சனிக்கிழமை என்றாலே வட்டத்துக்குள் வார்த்தை என்ற பகுதி மிகவும் பிடித்து அதனுடைய குறிப்புகளை வைத்து விடையை கண்டுபிடிக்கும் போது பரிசு பெற்ற ஒரு ஆனந்தம் வருவது தான் உண்மை


பல்சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அருமை மீம்ஸ் ஜோக்ஸ் விடுகதை என்று ஒவ்வொரு பகுதியும் என்னை ஆர்வமுடன் அந்த பக்கத்தை இரண்டு முறை படிக்க வைத்தது


 வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதி மிகவும் நல்ல தகவலை ஆரோக்கியமாக வாழ உதவும் செய்திகள். உடல் எடையை குறைக்க சொன்ன வழி மிகவும் அருமையாக இருந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


தமிழ்நாடு இ பேப்பரின் பதினாறாம் பக்கம் என்றாலே எனக்கு ஆனந்தம் கரைபுரண்டு ஓடும். அதில் உள்ள கடவுள் படங்களையும் செய்திகளையும் கண்குளிர பார்த்து படித்து மகிழ்ந்து பாராட்டுகிறேன்.


மரம் விழுந்து சரிந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலி என்று டெல்லியில் நடந்த சோகத்தை படித்தவுடன் கண்களில் கண்ணீர் வந்தது. ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது தடைகள் விதிப்பேன் என்ற டிரம்ப் அவர்களின் எச்சரிக்கை படித்ததும் அரசியல் நன்றாக புரிந்தது.


கிரைம் கார்னர் ஒரு அற்புதமான பகுதி அதில் வரும் செய்திகளை படிக்கும் போது பலவித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நாம் செய்து அதன்படி நடக்க வேண்டும் அடுத்தவரிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு உள்ளுணர்வையும் விழிப்புணர்வையும் தரும் நல்ல பகுதி.


சமீபத்தில் கல்கத்தாவில் தீ விபத்து நடந்ததையும் அந்த ஓட்டலை மம்தாஜி அவர்கள் பார்வையிட்ட செய்தியும் படமும் அங்கு நடக்கும் தகவலை அழகாக படம் பிடித்துக் காட்டியது. வாக்காளர் பட்டியலில் துல்லியத்தை மேம்படுத்த மூன்று புதிய முயற்சிகள் தேர்தல் ஆணையம் எடுத்தது நல்ல தகவல்.


விமானத்தில் உள்ள விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண் பயணிக்கு அடி செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது. ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த நகரங்களில் இரண்டு பேர் பலி என்று அங்கு நடக்கும் அந்த போரினை பற்றி அறிந்து கொள்ள தகவலாக இருந்தது.


20 பக்கங்களிலும் அருமையான செய்திகளை அழகாக தெளிவாக பிரசூரித்து எங்களின் புதிய விடியலுக்கு ஒரு உற்சாக விளக்கேற்றிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தாற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்


 நன்றி 

-உஷா முத்துராமன்.