tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-04.05.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-04.05.25


அன்புடையீர்,


வணக்கம். 4/5/20 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பருடன் வந்த தெய்வம் என்ற தெய்வத்தைப் பற்றிய அருமையான செய்திகளை தொகுத்துக் கொடுத்த இதழ் மிகவும் அருமை அதில் பெண்கள் அணிய வேண்டிய அணிகலன்கள் என்றும் மே மாதத்தின் ராசி பலன்களையும் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல அருமையான தகவல் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


தமிழ்நாடு இ பேப்பரின் முதல் பக்கத்தில் வந்த பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி பொருட்கள் தடை என்று மத்திய அரசு செய்தி இன்றைய பாகிஸ்தான் இந்திய நிலைமையை நன்கு பறை சாற்றியது. இன்றைய பஞ்சாங்கம் நல்ல அற்புத நாளாக எனக்கு அமைந்து நல்ல வழியை காட்டியது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


இன்றைய திருக்குறள் மிகவும் அருமை பொருளுடன் படித்து மகிழ்ச்சி அடைந்தேன். ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு வெண்ணைத்தாள் சேவை புறப்பாடு என்ற தஞ்சாவூர் நடந்த நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போல அருமையான படங்களும் செய்திகளும் அமைந்து இருந்தது.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக நோய் வருகிறது என்று அதற்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் என்னென்ன என்று மிகத் தெளிவாக சொன்னது பயனுள்ள தகவல். மீண்டும் சொத்து வரி உயர்வு என்ற தமிழக அரசின் மறுப்பை படித்தவுடன் பல தகவல்கள் மனதுக்குள் வந்து வந்து போனது.  


நடிகர் விஜய் அவர்களுக்கு மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு ஏட்டு கதிரவன் அவர்கள் மாலை அணிவித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட செய்தியை பார்த்தவுடன் அந்த அரசியலை நன்றாக தெளிவாக காட்டிய தகவல்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பக்தவச்சலம் அவர்களின் படமும் வரலாறு மிகவும் அருமை.அவருடைய அரசியல் வாழ்க்கையை அழகாக படம் பிடித்து காட்டிய நல்ல தகவல் மனம் நிறைந்த பாராட்டுக்கள்


வழக்கம்போல் பல்சுவை களஞ்சியம் பகுதி அமர்க்களமாக இருந்தது.மனோரா கோட்டை பற்றிய தகவல் மிகவும் அருமை. மீம்ஸ் விடுகதை ஜோக்ஸும் என்னை ரசித்து படித்து மகிழ வைத்தது.


ஜோதிடம் அறிவோம் என்ற பகுதியில் வந்த ஏழு விஷயம் நடக்கும் என்ற செய்தியும் இந்த இரண்டு ராசிக்கு வாழ்க்கை கொண்டாட்டம் என்ற செய்தியும் அருமையாக இருந்தது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


பணி நிறைவு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கும் பாராட்டு விழா நடந்த படமும் செய்தியும் மிகவும் அருமை. பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறது என்று செய்தி பள்ளிக்கூடம் எப்போது திறக்கும் என்ற தகவலை அழகாக சொன்னது.


சேலத்தில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது செய்தியை படித்தது மனம் வருந்தியது. ஏல சீட்டு நடத்தி என் ரூபாய் 78 லட்சம் மோசடி செய்த பெண் திருவள்ளுவர் என்ற ஊரில் நடந்த செய்தி மனதில் வேதனையில் ஆழ்த்தியது.


சிவகிரி அருகே 70 ஆகிய வயதான தம்பதியை கொண்டு 15 பவுன் நகைக் கொள்ள என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. வயதானவர்கள் குறிவைத்து தாக்கும் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என்று மனம் எண்ணியது.


கோவா கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் மரணம் அடைந்ததையும் 7 30 பேருக்கு காயம் ஏற்பட்டதில் படிக்கும் போது திருவிழாக்களை மிக ஜாக்கிரதையாக கொண்டாட வேண்டும் என்று எண்ணத் தோன்றியது.


தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு முழு ஆதரவு தரப்படும் என்று அமெரிக்க வெளியுறவு துறை மீண்டும் உறுதி செய்தது நல்ல தகவல்.


ஞாலமே விடியலில் உறங்கும் போது அந்த ஞாலம் அறிந்து கொள்ளும் அனைத்து செய்திகளை மிக அழகாக தொகுத்துக் கொடுத்து ஞாயிறு விடியலையும் உற்சாகமாக தொடங்க உதவும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

-உஷா முத்துராமன்