tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-10.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-10.04.25


 அன்புடையீர்,


வணக்கம். 10.4.2025 அன்று தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் மகாவீர் ஜெயந்திக்கு அனைவருக்கும் வாழ்த்து சொன்ன தமிழ்நாடு இ பேப்பரை பாராட்டு வார்த்தைகளே இல்லை. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக எனக்கு தொடங்க உதவியது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமான செய்தியும் படமும் கண்களில் கண்ணீரை வர வழைத்ததுர இன்றைய திருக்குறள் மிகவும் அருமையான பொருளாக இருந்தது. பாராட்டுக்கள். கேரளாவில் 30 சவரன் நகை எடை கொண்ட தங்க கிரீடம் குருவாயூர் கோவிலுக்கு கொடுக்கப்பட்டதை பார்த்தவுடன் கண்ணீர் மல்கியது. நலம் தரும் மருத்துவம் பகுதியில் தினமும் நட்ஸ் சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்று மிக அருமையான தகவலாக சொன்னது பாராட்டுக்குரியது. தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்தது என்ற செய்தி அதிர்ச்சியாக படிக்க வைத்தது. நகை கடன் வழங்குகளில் விரைவில் புதிய விதிமுறைகள் என்று அதிரடி திட்டத்தை பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். பெண்கள் போல சேலை அணிந்து கர்நாடகாவில் 100 நாள் வேலை திட்டத்தில் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்வது படித்தவுடன் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்களோ என்று எண்ணி மனம் வேதனையில் ஆழ்ந்தது. தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வித்தியாசமான செய்திகளை கொடுப்பது மிகவும் அருமை இன்று பட்டுராசு வரலாறு என்றும் அவரைப் பற்றிய செய்தியும் படமும் ஒரு புதிய தகவலாக எண்ணி படித்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டேன். பல்சுவைக் களஞ்சியம் பகுதியில் நம் முகத்தை ரோஸ் வாட்டர் கொண்டு அலம்புவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று படித்தவுடன் தெரியாத தகவலாக எண்ணி வியந்து படித்து முகத்தை பளபளப்பாக பராமரிக்க இது போதுமே என்று யோசித்தேன் மீம்ஸ் பகுதி மிகவும் அருமை. வாங்க சம்பாதிக்கலாம் பகுதியில் வந்த ஒவ்வொரு தகவலும் பயனுள்ள தகவல் இதுபோல் செய்தால் நிச்சயம் நாமும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் வரும். கோவில் தகவல்களும் படங்களும் பார்க்கும் போது புல்லரிக்க வைக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அனைத்து செய்திகளின் மிக அழகாக கொடுத்து எங்களுக்கு ஒரு ஆன்மீக செய்தியினை ஆர்வமுடன் கொடுக்கும் தங்களின் இந்த பணிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும் . ஐபிஎல் போட்டியின் போது செல்போன் திருடிய வழக்கு என்ற செய்தியை படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. விருப்பம் போல் சோதனை நடத்த அமலாக்க துறைக்கு அதிகாரம் கிடையாது என்று அருமையான தகவலை படித்ததும் உண்மைதான் என்று மனம் எண்ணியது. மக்களின் கனவை நினைவாக்கியது முத்ரா திட்டம் என்ற பிரதமர் மோடிஜி அவர்களின் பெருமிதம் நியாயமானது கடைசி பக்கத்தில் சீனாவுக்கு அமெரிக்கா 104 சதவீத வரி இந்தியாவிற்கு சீன தூதர் கடும் எதிர்ப்பு என்ற செய்தி அயல்நாட்டு செய்தியையும் அழகாக சொன்னது. . எந்த நாட்டு செய்தியையும் விடாமல் அனைத்து நாட்டு செய்திகளையும் அழகாக தரமாக பிரசூரிக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்