ஒரு ஒரு நொடியும்
ஓராயிரம் வார்த்தைகளை
ஓசையின்றி கொட்டுகிறது
உன்
ஓரவிழிப்பார்வை!
பல சமயம்
அமில மழையாய்!
சில சமயம் அன்பு மழையாய்!
நீந்தவும் தெரிவதில்லை!
நெருங்கவும் முடிவதிலை!
உறவுகளை
மதிப்பதும் சகிப்பதும்
நான்
அறிந்து வந்தக் கலை!
உணர்வுகளை வதைப்பதும் சிதைப்பதும்
நீ
அறிந்துவந்தக் கலை!
உன் உணர்வுகளின் ஒளிவு மறைவு ஆட்டத்தில்
என் மனதின் வலுவிழந்து
போகிறேன் நான்!
ஓய்வின்றி போராடுகிறேன்!
உன் உள்ளத்தை ஜெயிப்பதற்கு!
இறுதியாகவும் உறுதியாகவும்
ஒரு
வேண்டுகோள்!
ஒன்று
ஒதுக்கி விடு!
இல்லை
ஒன்றி விடு!
ஒன்றினால்
உன் வாழ்வுக்கு
நான் வேராவேன்!
ஒதுக்கினால்
உன் குழந்தைக்கு
பேராவேன்!!
-ரேணுகாசுந்தரம்.