திருமாலின் மூன்றாவது அவதாரம் ஸ்ரீ வராகர் அவதாரமாகும்.
மனித உடலும் வராக முகமும் கொண்ட வர் .
இவரை வழிபட்டர்கள் கடன் தொல்லை நீங்குகிறது. வாழ்வில் செல்வ வளம் பெருகுகிறது.
நீங்கள் காண்பது.. 108 திவ்ய தேசத் திருதலத்தில் ஒன்றான திருமெய்யம் குடைவரைக் கோவிலில் பல்லவ மன்வர்களால் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட அபூர்வ வராகர் இவராகும்.
திருமால் வராக மூர்த்தியாகஅமர்ந்த கோலத்தில் தனது வலது தொடைதனில் தாயாரை அமர்த்தி லெட்சுமி வராகராக சேவை சாதிக்கின்றார்.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டவர். கண்டு வணங்கி தரிசித்த பக்தருக்கு எல்லா நலங்களும் தர வல்லவர் திருமெய்யம் ஸ்ரீ லெட்சுமி வராகர் .