அன்புடையீர்,
வணக்கம். 12.5.2025 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரின் முதல் பக்கத்தில் சிந்தூர் தாக்குதல் நாள் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற போர் பற்றிய செய்தியை அறிந்து கொள்ள முடிந்தது.இன்றைய பஞ்சாங்கம் அருமையாக எனக்கு நல்ல நாளாக அமைந்தது.
திருக்குறள் மிகவும் அருமை அதைப் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் செடில் திருவிழா என்ற செய்தி மிகவும் அருமை. என்னை நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றது போல இருந்தது பாராட்டுக்கள்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் இன்று பதின்வயதினர் பார்க்கும் பிரச்சனைகள் என்ன என்று மிக அழகாக சொன்னது உண்மைதான். டிஜிட்டல் மோசடி அதனால் எட்டு மாநிலங்களில் 42 இடங்களில் சிபிஐ சோதனை செய்தது அதிர்ச்சியான தகவலாக இருந்தது.
இந்தியாவின் எச்சரிக்கையை மீறி ராஜஸ்தான் பார்மர் நகரில் பறந்த பாகிஸ்தான் டிரோன்கள் பற்றி படித்ததும் பயமாக இருந்தது. வெளியுறவு செயலரை விமர்சிப்பதா தலைவர்கள் கண்டனம் என்று சொன்னது உண்மைதான்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் லஷ்மி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பற்றிய வரலாறு மிகவும் அருமை படிக்கும்போது வரலாற்று செய்தியாக மிக அருமையாக இருந்தது.
பல்சிவைக் களஞ்சியம் பகுதியில் மீம்ஸ் விடுகதை இல்லாவிட்டாலும் மிக அருமையான தகவல்களை பிரசுரித்தது மிகவும் அருமை. சித்ரா பௌர்ணமி பற்றி சிறப்பு வாய்ந்தது அது என்று ஏன் சொல்லப் படுகிறது என்ற காரணம் போன்ற பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
பன்முகம் பக்கத்தில் வந்த வாழ நினைத்தால் வாழலாம் என்ற பக்கத்தை படித்தவுடன் சேர்ந்து இருந்த மனதிற்கு ஒரு உற்சாகமான பானம் கிடைத்தது போல அருமையாக இருந்தது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஸ்ரீ முஷ்ணம் பூவராகவ சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிகவும் அருமை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மாலை என்ற செய்தியும் மிக அருமையாக இருந்தது.எல்லா ஆன்மீக தகவல்களும் கோவில்களும் பரவசம் ஊட்டுவது தான் உண்மை.
அவசரமாக வீடு திரும்ப வேண்டாம் பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள் என்று மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை செய்ததை படிக்கும் போது அங்கு நடக்கும் போரின் நிலைமை மிக அருமையாக புரிந்தது .திருப்பூர் ஈரோட்டை தொடர்ந்து சேலத்திலும் வீட்டிலிருந்த தம்பதிகள் கொலை செய்யப்பட்ட செய்தி மிகவும் பயங்கரமான செய்தியாக மனதை வேதனையில் ஆழ்த்தியது .
பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் அமெரிக்காவின் நிராகரித்த இந்தியா வெளியான புதிய தகவல் செய்தியை படித்தவுடன் போரின் நிலைமை கண்டிப்பாக குறையும் என்ற ஒரு நம்பிக்கை வந்தது. ராணுவ பணிகளை மேற் கொள்ளும் ரோபோ என்று டி ஆர் டி ஓ விஞ்ஞானிகளின் மிகவும் அருமையான தகவல்.
20 - ம் பக்கமான கடைசி பக்கமாக இருந்தாலும் அதில் அயல்நாட்டு செய்திகளை அழகாக தொகுத்து கொடுப்பது மிகவும் அருமை பாகிஸ்தானுடன் போரிடுவது இந்தியாவின் தெரிவு அல்ல என்று சீனாவிடம் அஜித் தோவல் விவரித்தது போன்ற தகவல்களை படித்து உலக நிலைமையை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.
திருப்பிய பக்கமெல்லாம் நல்ல செய்திகளாக இருப்பதால் ஆவலுடன் விடியலை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து தமிழ்நாடு பேப்பரை படிக்கும் பல கோடி வாசகிகளில் நானும் ஒருத்தி என்ற பெருமையுடன் இதற்கு அருமையான ஏற்பாடுகளை செய்யும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தை மனதார பாராட்டுகிறேன்.
நன்றி
உஷா முத்துராமன்