. நகைக்கடன் நிபந்தனைகளால் உழைக்கும் மக்களின் கடன் பெறும் உரிமை பறிப்பு: முத்தரசன். இதனால், ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை, சிறு குறு விவசாயிகள் முதல் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் வரை பெரும் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை. இதில் முக்கியமானது அடகு வைக்கும் நகை தங்களுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரம்: இதனால் மக்கள் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாவார்கள். பெரும் குழும நிறுவனங்களுக்கு ற ரூபாய் 25 லட்சம் கோடியை தள்ளுபடி செய்து ஆதரவு காட்டும் ரிசர்வ் வங்கி உழைக்கும் மக்களின் நகை கடன் பெறும் உரிமையை பறிக்கும் வகையில் போட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது நியாயமானது. பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் 3 மகளிர் விடுதிகளை முதல்வர் திறந்துவைத்தார். பாராட்டுக்குரியது. பணிபுரியும் மகளிருக்கு உபயோகமானது. பல வசதிகள் கொண்டது. சர்வதேச புக்கர் பரிசு வென்ற கன்னட எழுத்தாளர்-குவியும் பாராட்டு. தமிழ் எழுத்தாளர்களும் இப்பரிசை பெறவேண்டும்.
-எஸ்.அப்துல் ரஷீத்.
தஞ்சாவூர்.