பிரதமரின் இலங்கைப் பயணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாகியிருக்கி
ன்றன. இதனை வைகோ விமர்சித்திருக்கின்றார். உண்மை தான். கொத்துக் கொத்தாகத் தமிழர்களைக் கொன்று குவித்ததை மறக்க முடியாது தான். இனிமேலாவது நடப்பவை நல்லவையாக நடக்கட்டும்.இலங்கையை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார் . நடைமுறைப் படுத்தினால் சரி.
பாம்பன் பாலத் திறப்பு விழாவில் தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து வரும் கடிதங்களில் யாரும் தமிழில் கையொப்பம் இடுவதில்லை என்ற உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.
தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழிலே கையொப்பம் இடவில்லை என்றால் ?
அரசு அலுவலர்கள் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் என்று அரசாணை உள்ளது. கையொப்பம் இடுகிறார்கள் . தமிழில் அரசாணையும் வெகுகாலமாக வெளிவருகிறது. பிறகு இவர்கள் மட்டும் ஏன் இப்படி அவப்பெயருக்கு ஆளாகிறார்கள்
கோடைகாலத்திற்கேற்ற
குளிர்பானம் இளநீர். இயற்கை பானம். கலப்படமில்லாதது.
பழங்களை சாறாக்கி சாப்பிடுவது நார்ச்சத்தை
எடுத்து விடும். இனிப்புச் சத்து கேடு எனப் பலகாலமாக மருத்துவர்கள் சொன்னாலும் கடித்துத் தின்ன சோம்பேறித் தனம். உரித்துச் சாப்பிடக் கூட சோம்பேறித் தனம் உள்ளவர்களை வாழைப்பழச் சோம்பேறி என்று சொல்வதுண்டு.
கடந்த தேர்தலுக்கான செலவு ஒரு லட்சம் கோடி என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொல்வதைக் கேட்கும் போது தலை சுற்றுகிறது.
நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்தினால் ரூ12000 கோடி மிச்சம் என்கிறார் . சில அரசியல் கட்சிகள் ஏன் எதிர்க்கிறார்கள் தெரியவில்லை.
மெளனம் கலைத்த இலக்கியா தீபக்கிடம் காதலை வெளிப்படுத்த அவர் என அழைப்பது காதலின் உணர்வு மேன்மை கொள்வதை
நாசூக்காக கதாசிரியர் உணர்த்துகிறார்.
ஒரு காலத்தில் கணவன் பெயரை மனைவி சொல்லாத கலாச்சாரம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஆண்களைப் போன்று பெண்களும் போடா வாடா என்றழைப்பதைக் காண்கின்றோம்.கீழப் பழுவூரார் பழமை மாறாமல் நினைவு படுத்தி
கையாண்டிருக்கிறார் . பலே!
விழிப்புணர்வு கதையில் சுட்டப்படுள்ளபடி கால்நடைப் பயிற்சியாக
காலையில் செல்லும் போது 7 மணிக்கும் சாலையில் விளக்கெரிவது கண்டு அணைத்திருக்கிறேன்.
அதற்குரிய பணியாளர் பொறுப்புணர்ந்து செயல்படாததால் மக்களின் தலையில் வரிச்சுமை.
வாசகர் கடிதத்தில் ஜெயந்தி சுந்தரம் சொல்லியிருப்பது போல் விமானத்தில் ஏறியும் திருடுவான்.குதிக்க முனைந்தால் அம்போ தான்.சமீபத்தில் ஒரே நாளில் 7 பேரிடம் சங்கிலியைப் பறித்து விட்டு விமானத்தில் ஏறி தப்பிக்க முயன்று காவல்துறை குண்டுக்கிரையான சம்பவமும் நடந்ததே.
சின்னஞ்சிறு கோபு நல்ல மனைவி தலைப்பில் எழுதியுள்ள உரையாடலில் மனைவி பின்னால் சொன்னதை முன்னால் சொல்லியிருந்தால் காபி டிக்காசனாவது மிஞ்சியிருக்கும்.
கவிதைகள் நன்றாக இருந்தாலும் சில கவிதைகளில் எழுத்துப் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன.
வருங்காலத்தில் தமிழ் என்னாகுமோ. உதாரணத்திற்கு ஒன்றிரண்டு:-
தலைப்பு:- தாய்த்தமிழ் அழகு
தவறு. சரி
———— ——
களனி கழனி
முத்தானை. முந்தானை
கனுக்கால் கணுக்கால் அனிந்தோமே. அணிந்தோமே
ஆயுதம் வேண்டாம்
————————-
போராமை—பொறாமை
இயற்கையின்
———————-
பிள்ளைகள்
——————
நோடியோ— நொடியோ
-சிவ.சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி