கேரளாவில் விழிஞ்சம் சர்வதேச
துறைமுகத்தை மோடி திறந்து
வைத்தார். இதன் சிறப்பு அம்சம்
என்னவென்றால் இது அதானி
குழுமத்தால் கட்டப்பட்டது.
திமுகவை தோற்கடிக்க மெகா
கூட்டணி அமைக்கப்பட்டது என
பழனிச்சாமி அறிவிப்பு தற்போது
கூட்டணியில் பாஜக மட்டும் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை யாரும்
அரசியல் ஆக்க வேண்டும் என
நிர்மலா சீதாராமன் கோரிக்கை.
இன்னும் 6300 கோடி 2000 ரூபாய்
நோட்டுகள் திரும்ப வர வேண்டி
உள்ளது என் ஆர் பி ஐ அறிக்கை
நாட்டில் தெரு நாய்களின் தொல்லை
தாங்க முடியவில்லை இதனை
கட்டுப்படுத்த அரசு விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வான்வெளி பரப்பை பாகிஸ்தான்
மூடியது அதனால் ஏர் இந்தியாவுக்கு
5000 கோடி நஷ்டம். இதுவே
பாவம் ஏர் இந்தியா. மனிதன்
தெய்வமாகலாம் என்ற கதை
நல்ல கருத்தாழம் மிக்க கதை
முருகன் மந்திரங்களும் அதன்
பலன்களும் அனைவருக்கும்
பயன்படும் விதத்தில் உள்ளது
30 புதுக்கவிதைகளும் அபாரம் சார்
நெல்லை குரலோன் கவிதைகள்
நல்ல கற்பனை வளம் நிறைந்ததாக
உள்ளது. வேலூர் முத்து ஆனந்த்
சாரின் காதல் அல்லது காதல்
என்ற கவிதை ஒரு காவியம்
வரிக்கு வரி அற்புதமான படைப்பு
ஜாதி வாரி கணக்கெடுப்பு
சாத்தியமா நாட்டில் 3000 ஜாதிகளும்
25,000 துணை ஜாதிகளும் உள்ளன
கேட்கவே தலை சுற்றுகிறது
தமிழ்நாட்டில் மட்டும் 500 ஜாதிகள்
உள்ளன பாரதியார் ஜாதிகள்
இல்லையடி பாப்பா என பாடினார்
இதை எலலாம் காண பாரதியார்
உயிரோடு இல்லை கொடுத்து
. வைத்தவர். ராமர் பாலத்தில்
ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போக
சுற்றுலாத்துறை ஏற்பாடுகள்
வரவேற்கத்தக்கது. ஈரானிலிருந்து
எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு
தடை விதிக்கப்படும் என டிரம்ப்
எச்சரிக்கை. கூகுள் சுந்தர் பிச்சை
பாதுகாப்புக்கு ஆண்டுக்கு
58 கோடி செலவு செய்யப்படுகிறது
கொடுத்து வைத்த மதுரைக்காரர்
நாளுக்கு நாள் உங்கள் பத்திரிகை
மெருகு கூடிக் கொண்டே செல்கிறது
அதன் ரேட்டிங் இன்னும் பல மடங்கு
கூடி வருவது ஆச்சரியம் அளிக்கிறது
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கும்
அதன் ஊழியர்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுக்கள்
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி