tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-06.04.25

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா)-06.04.25


மோடி இலங்கை சென்றதும் 

இந்திய மீனவர்கள் விடுதலை 

செய்யப்பட்டனர். அப்படியே 

கொஞ்சம் பறிமுதல் செய்த 

படகுகளையும் விடுவித்தால் 

நல்லது. தமிழகம் இந்தியாவில் 

அனைத்து துறைகளிலும் 

முன்னிலை வைப்பது பாராட்ட

தகுந்தது. வங்கிகளில் நகை கடன் 

வாங்கினாலும் சிக்கல் பர்சனல் 

லோன் வாங்கினாலும் சிக்கல் 

நிர்மலா சீதாராமன் ஆர்பிஐ 

கவர்னர் இருவரும் சேர்ந்து 

நாட்டை மோசமான நிலைக்கு 

தள்ளி விடுகிறார்கள். தமிழகத்தில் 

பரவும் தக்காளி காய்ச்சல் 

இனி ஆப்பிள் ஆரஞ்சு காய்ச்சல் தான் 

பாக்கி. நகை கடன் கொள்கைக்கு 

எதிராக வழக்கு தாக்கல். 

நன்மையில் முடிந்தால் நல்லது. 

நடிகர் பிரதீவிராஜ் வருமான வரி 

கட்டவில்லை என நோட்டீஸ் 

பிரித்திவிராஜ் எம்பிரான் 

படத்துக்கு 40 கோடி சம்பளம் பெற்றுக் 

 கொண்டு வருமான வரி 

செலுத்தவில்லை என்றால் 

என்ன அர்த்தம். சின்னஞ்சிறு கோபு

சாரின் தூக்கம் வராதவன் பாடு 

என்ற கவிதை நல்ல நகைச்சுவை. 

ரிஷிவந்தியா சாரின் நருக்ஸ்


நொருக்ஸ் கவிதை நல்ல கற்பனை 

இருவருக்கும் பாராட்டுக்கள். 

கனவின் பலன்கள் கட்டுரை 

புதுமையாக இருந்தது. கடந்த ஒரே 

ஆண்டில் கேரளாவுக்கு இரண்டரை 

கோடி பயணிகள் சுற்றுலா வருகை 

 அங்கு டூரிசம் நல்ல முறையில் 

செயல்படுகிறது. பஞ்சாபில் 

போதைப்பொருள் வழக்கில் 

4700 பேர் கைது குஜராத்தை 

ஏன் விட்டு விட்டீர்கள். இந்தியா 

இலங்கை இடையே பல ஒப்பந்தங்கள் 

போட்டதன் மூலம் இந்தியா 

சீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் 

கொடுத்துள்ளது. 



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி