தமிழ் நாடு இ பேப்பரின் துல்லிய
செய்தி பிளஸ் படைப்பு படையெடுப்பு எண்ணற்ற வாசக உள்ளங்களை கொள்ளை கொண்டு விட்டன. ஆசிரியர் குழுவினரின் அயரா -
அர்ப்பணிப்பு உணர்வுக்கும் உழைப்புக்கும் கிடைத்த உயர்வான வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவின் துல்லிய தாக்குதல்... படங்களுடன் விரிவான முதன்மை செய்திகளாக பதிவாகி இருந்தது ராஜ கம்பீரம்.
தமிழ்நாடு இ பேப்பருக்கு ராயல் சல்யூட்!
பெண் அதிகாரிகளைக் கொண்டே ஆபரேஷன் சிந்தூர் குறித்த விளக்கம் படித்து சிலிர்ப்பு மேலோங்கியது. சூப்பர்! விபத்துகள் தவிர்க்கப் படுகிறது...
சொன்னவர் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.
எவ்வளவு அழுத்தம் கூடிய அர்த்தம் பொதிந்த வாசகம்...!
வன்முறைக்கு வன்முறை தீர்வு கிடையாது என்பது
அசைக்க முடியாத உண்மை. எனினும்
எதார்த்த நடைமுறைகளை புறந்தள்ள முடியாத
அசைக்க முடியாத கட்டமைப்பு தான் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.
எனினும் எதிர் காலத்தில் இதை விட எளிதான -- இனிமையான தீர்வு கிடைக்கும் என்று தீர்மானமாக நம்புவோம். நலம் பல பெறுவோம்!
214 புதிய பஸ்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தது ஜோர்... ஜோர்!
பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா முன்னேறும்.
ஐ.எம்.எப் ஆய்வறிக்கை.
பழமைப் பெருமையிலும்
பண்பாட்டு செழுமையிலும்
பாரினில் உயர்ந்தோங்கி தழைத்தோங்கி
தனித்துவ மேம்பாட்டில்
ஜொலிக்கும் பாரத தேசம் விரைவில் பொருளாதாரத்திலும்
முதலிடம் வந்து
முத்திரை பதிக்கும்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் புடலங்காய்!
புட்டுப் புட்டு வைக்கிற மாதிரியான புடலங்காய் பற்றிய
சுவையான பயனுள்ள
கட்டுரை... உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற திருமூலரின் திருமந்திரம் நினைவுக்கு வருகிறது.
கூடவே இன்னொரு
சுவாரஸ்யமான மலரும் நினைவு...
சில வருடங்களுக்கு முன்...
'கல்கத்தா புடலங்காய்
ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்...' என்றாள் என் சகதர்மிணி.
' அப்படியா?' என்று வாய் பிளந்து கேட்டேன் நான்.
'ருசிக்காகப் பார்த்தால்
ரொம்ப செலவாகுமே'
என்று வழக்கமான கஞ்சத் தனத்தில் இழுத்தேன்.
ஒரு மாதிரியாக முறைத்துப் பார்த்தவாறே, ' அப்படி என்ன செலவாகப் போகிறது...' என்று மெல்லிய எரிச்சலை வெளிப்படுத்தினாள் மனைவி.
உடனே நான், ' கல்கத்தாவில் இருந்து கொண்டு வர போக்குவரத்து செலவு ஆகும்லா?' என்று புத்திசாலித்தனமாய் கேட்கவே கல கல வென்று சிரித்து என்னைக் குழப்பினாள்.
தெளிவில்லாமல் நான் திணறுவதை பரிதாபமாகப் பார்த்து சொன்னாள்: " நான் சொன்னதை அப்படியே நம்பிட்டீங்க
ளாக்கும்... புடலங்காய் நேரா வளரணும்கிறதுக்காக தொடக்கத்தில் நுனியில் கல்லை கட்டி விடுவாங்க தெரியுமா... அப்படி கல்லு கட்டாத புடலங்காய நெளிஞ்சி வளைஞ்சு, கோணல் மாணலா இருக்கும்.
.அதுக்குப் பேரு தான் கல்கட்டா புடலங்கா ' என்றாளே பார்க்கலாம்!
மனைவிகளிடம் மிகுந்த கவனமா --
எச்சரிக்கையா இருக்கணும்... ஜாக்கிரதை!
100 நாள் வேலைக்கான தினசரி ஊதியம் ரூ336 ஆக உயர்த்தி அரசு உத்தரவு. உழைக்கும் வர்க்கத்துக்கு உற்சாக செய்தி! இது மட்டுமா?
தமிழக அரசு ஊழியருக்கான பண்டிகைக் கால முன் பணம் ரூ20000 ஆக உயர்வு.
தேர்தல் வரும் பின்னே
சலுகை ஓசைகள் வரும் முன்னே... எப்படி
சரிதானே?
பயணங்கள் முடிவதில்லை கட்டுரை யில் அமெரிக்காவைப் பற்றிய அருமையான தகவல்கள்... படிக்கப் படிக்க சந்தோஷம்.
புதுப் புது அனுபவங்களால்
புத்துணர்வு பெறும் வண்ணம் புதுப் பகுதிகளை அறிமுகப் படுத்தி வாசகப் பெருமக்களை ஆனந்தப் படுத்தி வரும் ஆசிரியர் குழுவினர்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்!
சிவ ஸ்லோகம் பெருமையை சிறப்புடன் சொல்லி மனதில் மகிழ்ச்சி
பெருக்கியது கோபி பச்சமுத்துவின் ஆன்மீகக் கட்டுரை!
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் மூவலூர் ராமாமிர்தம் வரலாறு...
வெகு ஜோர்... நேர்த்தியான தகவல் தொகுப்பு... படிக்கப் படிக்க பேரார்வம்.
இவரின் பெயரால் உள்ள திருமண உதவித் திட்டம் இந்த அம்மையாரால் பெருமைப் படுகிறது என்று சொன்னால் மிகையாகாது.
கவிதைப் பக்கங்கள்
கனகச்சிதமான கட்டமைப்பு... கற்கண்டு சுவை
கருத்துத் தோரணங்களால் கவனத்தைக் கவர்கின்றன.
இன்னும் எத்தனை எத்தனையோ
செய்திகள்...
தேன்சுவை தகவல்கள்... பக்குவத்திற்கும் பரவசத்திற்கும் வழி காட்டும் பண்பட்ட படைப்புகள்...
தமிழ் நாடு இ பேப்பரின்
தன்னிகரில்லா
தனித்துவ மேன்மைக்கும்
தளர்ச்சி யில்லா தொடர் பயணம் பிளஸ் பங்களிப்புக்கும்
பாசம் பொங்கி ததும்பும் நேசத்தில்
தவை வணங்குகிறோம்.
வாழ்க வாழ்க
பல்லாண்டு...
பன்னூறாண்டு...
பல்லாயிரத்தாண்டு!
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்