தமிழ் நாடு இ பேப்பரின் ஆக்கப்பூர்வமான சேவை அனைவருக்கும் ஆச்சர்யத்தோடு ஆனந்தம் அளித்து வருவது ஆரோக்கியமான விஷயம். இதை எல்லோரும் உணர்ந்தால் மட்டும் போதாது...ஒல்லும் வகையெல்லாம் பரப்பி, பரந்து பட்ட பயன்பாடுக்கு வழி வகுத்திட வேண்டும்.
இருபது லட்சத்துக்கும் மேலான வாசக சொந்தங்களை பெற்று பீடு நடை போட்டு ஜெயக்கொடி நாட்டி வரும் தமிழ்நாடு இ பேப்பரை படைப்பாள உள்ளங்கள் அனைவரும் போட்டி போட்டு காதலித்து வருவதை நினைந்து
மனம் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இந்த
வியனுலகு விரிந்த
காதலுக்கு சற்றும் பொருந்தாது தானே?
காதல் என்று காரணம் இல்லாமல் கூற வில்லை.
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கும் மாமலையும் கடுகாமே '
என்ற பாரதிதாசனாரின் வீர்யமிக்க வரிகள்
காதலின் வலிமையை
துல்லியமாக எடுத்துரைத்தது எவ்வளவு பெரிய பேருண்மை!
தமிழ் நாடு இ பேப்பரை விழுந்து விழுந்து காதலிக்கும் அத்தனை பேருக்கும்
காதலால் கிடைக்கும்
பேராற்றல், இருபது லட்சம் வாசக சொந்தங்களை விரைவில் கோடி வாசக சொந்தங்கள் என்ற எல்லையைத் தொட வைக்கும்.
இது தானே காதலுக்கு மரியாதை!
இந்த தருணத்தில் இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசை... எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே!
பேத பிணக்கெதுவும்
பாராமல், வானமே எல்லை என்ற பச்சை சுதந்திர வேட்கைக்கு சிகப்புக் கம்பளம் விரிக்கும் வகையில்
தூய உள்ளத்தில்
படைப்பாளர்களை
ஊக்குவிக்கும் தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினரின் உன்னத பண்புக்கு-- உயர்ந்த
நோக்கத்திற்கு தலை வணங்குவது தார்மீக் கடமை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.
இது ஏதோ ஒரு சுயநலம் நோக்கத்தில் ஜால்ரா தட்டும் வேலை என்று யாரும் அவசரப்பட்டு கொச்சைப் படுத்திட முனைய வேண்டாம்.
பண்பாட்டு தளத்தில் நின்று இன்றைய எதார்த்த சூழலை மனதில் கொண்டு
மாசற்ற தன்மையில்
பாராட்டி மகிழ்வது என்பது மண் வாசணை பொருந்திய
மனித நேயப் பண்பு என்ற நுடபம் புரிந்து கொண்டால், பொருள் விளங்கி பிரித்துப் பார்த்து, பிழை கூறும்
பழியில் இருந்து தப்பித்தும் கொள்ளலாம்.
தகுதியானதை உற்றுணர்ந்து -- பெருமை உணர்ந்து
புறக்கணிக்காது போற்றி கொண்டாடிய
புலமைத் திறனை தக்க வைத்தும் கொள்ளலாம்!
ஆகவே அன்பான நட்பு வாசக சொந்தங்களை பணிவன்புடன் வேண்டுவது இது தான்...
தமிழ் நாடு இ பேப்பரின் இந்த மேம்பட்ட சேவையின் மேன்மையினை
மிகச் சரியாக புரிந்து கொண்டு மனதுக்குள்
வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது... நண்பர்கள்,
உறவினர்கள் என்று நமக்கு வேண்டிய நல் உள்ளங்கள் அனைவ ருக்கும் தமிழ் நாடு இ பேப்பரின் சேவைகளைப் பற்றி தொடர்ந்து, மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இதை ஒரு சமூகக் கடமையாக
மனதில் தரித்துக் கொணாடால், குறுகிய --கொச்சை எண்ணங்கள் தலை தூக்காது...
தலைக்கு ஐந்து பேர் என்று இலக்கு வைத்து
தமிழ் நாடு இ பேப்பரின் குழுமத்தில்
இணைத்து விட்டால்
ஆசிரியர் குழுவினரின் இலக்கான ஒரு கோடி வாசக சொந்தங்களை
எளிதில் காணலாம்.
இந்த சமூகம் மேம்பட
எண்ணற்ற காரியங்களை நிறைவேற்றி நிறைவடையலாம்.
நெஞ்சம் பூரித்து
நிம்மதி காணலாம்.
வஞ்சமில்லா
பஞ்சமில்லா,--அறிவுப்
பஞ்சமில்லா
அதி அற்புத உலகைப்
படைத்து மகிழலாம்.
பரவசம் உணரலாம்.
அனைத்துக்கும் அடிப்படை
மனித நேயப் பண்புடன் கூடிய
பண்பட்ட நம்பிக்கை..
நம்பிக்கை தானே வாழ்க்கை...!
-நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்