tamilnadu epaper

வாசகர் கடிதம் (பார்வதி நாகமணி)-12.05.25

வாசகர் கடிதம் (பார்வதி நாகமணி)-12.05.25

வாசகர் விமர்சனம்


ஜனனி அந்தோணி ராஜ் எழுதிய,'மாங்காவும் மாயையும்' சிறுகதை படித்தேன். மிகவும் அருமை. மாங்காய் வியாபாரத்தில் பெரிதாக வருமானம் இருக்காதே என்று நமக்குத் தோன்றினாலும், அங்கிருந்தபடியே பல தரகர் வேலை பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பது, அவர் திறமையை வெளிப்படுத்தியது.


வளர்மதி ஆசைத்தம்பி அவர்கள் எழுதிய, 'உனக்கும் கீழே பலர் உண்டு' என்ற சிறுகதை மிக மிக அருமை. கடவுள் நம்மள மட்டும் தான் சோதிக்கிறார், நமக்கு மட்டும் தான் இப்பிடி எல்லாம் நடக்குது என்று புலம்புபவர்க்குச் சரியான சாட்டையடி.


-பார்வதி நாகமணி