tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி )-08.05.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி )-08.05.25


பஹல்காம் படுகொலைக்கு பதிலடியாக நமது ராணுவம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் பலவற்றை துல்லிய தாக்குதல் மூலம் அடித்து நொறுக்கி இருக்கிறது. 


40 கோடி மக்களை கொண்ட பாகிஸ்தானுக்கு இவ்வளவு திமிர் என்றால் 140 கோடி மக்கள் தொகையை கொண்ட பலம் வாய்ந்த நாடாகிய நமக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும் என்பதை இந்நேரம் அவர்கள் உணர்ந்து இருப்பார்கள்.


சிவனே என்று இருந்த இஸ்ரேல் நாட்டின் மீது திமிர் எடுத்து ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேலில் 1200 பேர் இறந்தார்கள். பயங்கரமான நஷ்டம் ஏற்பட்டது.


 இஸ்ரேலின்

அன்று தொடங்கிய பலி வாங்கும் தாக்குதல் இன்று வரை தொடர்கிறது. இதுவரை 52 ஆயிரம் பேருக்கு மேல் ஹமாஸ் இயக்கத்தினரும் பாலஸ்தீன மக்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஹமாஸ் மீதான தாக்குதல் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் பஹல்காம் தாக்குதல் இதை நினைவுபடுத்துகிறது.


பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை தாக்காமல் தீவிரவாதிகளின் முகாம்களை மட்டுமே தாக்கி அழித்த இந்தியாவின் செயல் நாங்கள் போருக்கு  அலையவில்லை. தீவிரவாதத்தை ஒழிக்க மட்டும்தான் விரும்புகிறோம் என்ற இந்தியாவின் எண்ணத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தி இருக்கிறது.


சாலை விபத்துகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது. அறிவிப்பால் மட்டுமே எந்த பலனும் கிடைத்து விடப் போவதில்லை. இப்படித்தான் 70 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் என்ற காப்பீட்டு திட்டம் நடைமுறைக்கு வந்தது. 

அதனால் பெரும்பாலானோருக்கு பயனில்லை. தனியார் மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.


பொதுமக்கள் கண்டு களிப்பதற்காக ஊட்டி மலர் கண்காட்சி 10 நாட்கள் அதிகரிக்கப்படுகிறது என்ற செய்தி சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளது.


தமிழக அரசு பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணத்தை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது. 2026

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிருப்தியில் இருக்கும் அரசு ஊழியர்களை தாஜா படுத்துவதற்கான ஆரம்பகட்ட முயற்சி  இதுவாகும்.  


இன்னும் போகப் போக அரசு ஊழியர்களின் காட்டில் சலுகை மழை பெய்யப் போவது  உறுதி ! ஆனால் அவர்கள் இவற்றையெல்லாம் விட தங்களது முக்கியமான கோரிக்கைகளை வென்றடைய விரும்புகிறார்கள். ஒருவேளை அவைகளும் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.


-வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்