தமிழ் நிலா" />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-08.05.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-08.05.25


நன்னிலம் இளங்கோவன் எழுதிய " வாழ்க்கை பாடம்" பிள்ளைகளுக்கு பள்ளிக்கல்வி மட்டுமின்றி, வீட்டு வேலைகளையும், பிறரை மதிக்கும் பண்பையும் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.


தமிழ் நிலா எழுதிய " வரவும் செலவும்" பிறருக்கு கொடுக்கும் எண்ணத்தை வளர்க்கவும் அதே வேளையில், வரவறிந்து செலவு செய்யப் பழக வேண்டும் என்பதை உணர்த்தியது.


மனோரமா நாகேஷ் நகைச்சுவை பற்றி உமாதேவி சேகர் பல்சுவைக் களஞ்சியம் பகுதியில் எழுதியதும் இருவர் தொடர்பான நகைச்சுவை காட்சிகள் நினைவிற்கு வந்தன.


மனோரமா: எங்கப்பா ஆசையா ஜூலி ஜூலி னு ஒரு நாய் வளர்த்தாரு...நாய் செத்துப் போச்சு .


நாகேஷ்: நாய்க்கு பேரு வச்ச, சோறு வச்சியா?


இன்னொரு படத்தில் மனோரமா ஞானசம்பந்தம் என்ற பெயருடைய நபரைப் பார்த்து,

மிஸ்டர் ஞானசம்பந்தம் 

ஞானத்திற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பார்.


-ஸ்ரீகாந்த்

திருச்சி