முகில் தினகரன் எழுதிய " அம்மா சமையல்"" />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-16.05.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-16.05.25


சசிகலா விஸ்வநாதன் எழுதிய " தந்தையும் ஆன அன்னை" வாலிபன் ஆன பின்னும் சலூனுக்கு அம்மாவுடன் செல்வதெல்லாம் ரொம்ப ஓவர்.


முகில் தினகரன் எழுதிய " அம்மா சமையல்" மகனுடன் அவன் மனைவியை சேர்த்து வைப்பதற்காக மோசமாக சமைத்த அம்மாவை இப்பதான் கேள்விப்படுகிறேன்.


சிவ.முத்து லட்சுமணன் எழுதிய " கண்ணப்ப நாயனார் வரலாறு" இதில் இடம் பெற்ற நாயனார் படத்தை திருச்சி தனியார் கண் அறுவைசிகிச்சை மையமான ஏ.ஜி.மருத்துவமனையில் கண்டேன். கண்ணப்பன் போல அர்பணிப்பான சேவையை உணர்த்த அப்படமாம்.


ஸ்ரீரங்கம் உமா முரளி எழுதிய " அரியுருவாய் அவதரித்த ஹரி- நரசிம்ம ஜெயந்தி சிறப்பு"

நரசிம்மன் எங்கு உளான் ? என இரண்யகசிபு கேட்க, பிரகலாதன் "எங்கும் உளான்" என்றது நினைவிற்கு வந்தது.


-ஸ்ரீகாந்த்

திருச்சி