tamilnadu epaper

வாசனை

வாசனை

நீ

வந்துவிட்டாய்

என்பதை

நானறிவேன்..

 

இருந்தும்

தெரியாததுபோல்

விழிமூடி

உறங்குவதாய்

ஒரு

பாசாங்கு

நிகழ்ந்துகொண்டிருக்கிறது..

 

பார்த்துவிடலாமா

விழிதிறந்து

உன்

அருகாமையை..

 

வேண்டாம்

வேண்டாம்..

 

நீ

என்ன

செய்கிறாய்

என

பார்க்கலாம்..

 

அருகில்

வெகு

அருகில்

உன்

வாசனை..

 

கிறங்கடிக்கும்

அந்த

வாசனை

அவ்வளவு

பரிச்சயம்

எனக்கு..

 

ம்ம்ம்..

 

கொலுசொலி

கொஞ்சமாய்

பெரிதாய்

இரைந்து

அருகில்

நின்றது..

 

விழிக்கவோ

பேசவோ

இயலவில்லை..

 

நீ

கடந்து

நகர்கிறாய்..

 

தொலைவுகளில்

கரைகிறாய்..

 

இந்த

கனவுகள்

தினமும்

வந்துவிடுகிறது..

 

உன்

சிரிப்பொலியும்

அதித

அன்பும்

எனக்குமட்டுமே

என்ற

இறுமாப்போடு

புதைந்துவிடுகிறேன்..

 

இவன

ஏதாச்சும்

கோவிலுக்கு

கூட்டிட்டு

போங்க

விடியவிடிய

உளறிட்டேயிருக்கான்

என்றாள்

அம்மா..!

 

ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்