வானதியின் தாய் தந்தை முதியவர்கள் அவர்களை சென்னையில் விட்டுவிட்டு அமெரிக்காவில் வேலை பார்த்தாள் வானதி .


   தன் தாய் தந்தைக்கு பணிவிடை செய்ய ஒரு ரோபோவை" />

tamilnadu epaper

வாழ்வியல் பாடம்

வாழ்வியல் பாடம்


 " வானதியின் தாய் தந்தை முதியவர்கள் அவர்களை சென்னையில் விட்டுவிட்டு அமெரிக்காவில் வேலை பார்த்தாள் வானதி .


   தன் தாய் தந்தைக்கு பணிவிடை செய்ய ஒரு ரோபோவை ஏற்பாடு செய்து இருந்தாள் வானதி .


   ரோபோவுக்கு ஜான் என்று பெயர் வைத்து அழைத்தாள் வானதி . அதற்கு தேவையான இன்ஸ்ட்டெக்ஷன் கொடுத்து வந்தாள் .


 பெற்றோர்கள் நலமாய் இருந்தனர் . ஜான் ரோபோ தன் கடமையை சரியாக செய்து வந்தது .


   ஆண்டு இறுதியில் விடுமுறை எடுத்துக் கொண்டு வானதி பெற்றோரை பார்க்க வந்தாள் .


   பத்து நாள் விடுமுறை தன் தாய் தந்தைக்கு எல்லா பணிவிடையும் , அன்பாய் ஆதரவாய் பாசமாய் பேசி பழகி நினைவுகளை அசை போட்டு மகிழ்ந்தாள் வானதி .


  வானதியின் தாய் தந்தையர் கண்ணில் ஆனந்த கண்ணீர் துளிர்த்து தெறித்தது ஜான் ரோபோ மீது.

  

பத்து நாட்களும் அருகில் இருந்து அனைத்தையும் கவனித்த ஜான் ரோபோ மெல்ல வானதியிடம் கேட்டது ..."


   உணர்வுகளை புரிந்து பரிமாறும் திறன் எனக்கு வேண்டும் என்று ..."


   கண்ணீர் சிந்திய வானதி விஞ்ஞான தொழில் நுட்பம் இன்னும் எட்டாக் கனியே என்று மனதால் சிந்திக்க தொடங்கினாள் .


    மனிதனும் இயந்திரமும் வேறு என்பதை உணர்ந்தவளாக விம்மினாள் வானதி .... "


- சீர்காழி. ஆர். சீதாராமன்.

- 9842371679 .