இந்த
அலங்காரமும்
ஆராதனையும்
உன்னை
ஒரு
தேவதையாகத்தான்
ஆலிங்கனம்
செய்கிறது...
தூரத்து
மலைமுகில்கள்
கானம்பாட
பாதையின்
இருமருங்கிலும்
மரங்கள்
மேளம்
கொட்ட
ஈரக்காற்று
இதயம்
வருட
உனக்கு
என்
ஆலாபனை
கேட்கிறதா..
நீ
எனக்கு
பால்யகாலந்தொட்டு
சிநேகிதம்..
உன்
விழிகளில்
வழிந்து
என்
இதயம்
கலந்த
காதல்
சொல்லப்படவேயில்லை..
இருள்கவ்விய
இரவொன்றில்
உன்
இதழ்படிந்த
ஈரமுத்தம்
அவ்வப்போது
கனவிலூறும்..
செவிகளில்
கசிகிறது
உன்
விசும்பல்..
முன்வண்டியில்
மாப்பிள்ளை
போகிறார்
ராஜாவாட்டம்...
இந்த
அலங்காரமும்
ஆராதனையும்
உன்னை
ஒரு
தேவதையாகத்தான்
ஆலிங்கனம்
செய்கிறது..
உன்
விசும்பல்
இன்னும்
ஓயவில்லை...
நானொரு
வண்டியோட்டியாகத்தான்
உனக்கு
அறிமுகம்..!
ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்