Breaking News:
tamilnadu epaper

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் எல்லாமே ஐந்து

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் எல்லாமே ஐந்து

 

விருத்தாசலத்தில் உள்ள

விருத்தகிரீஸ்வரர் ஆலயம். இத்திருத்தலத்தின் புராணப் பெயர் 'திருமுதுகுன்றம்' என்பதாகும். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில், 9-வது தலம் இதுவாகும். 

இந்தக் கோவிலில் எல்லாமே 5 ஆக அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். அதாவது 5 கோபுரங்கள், தினசரி 5 வழிபாடுகள், 5 தீர்த்தங்கள் என்று அமைய பெற்றுள்ளது. இதை தவிர்த்து மேலும் 5 ஆக அமைய பெற்றுள்ளது பற்றி பார்ப்போம்.

 

 *பஞ்சமூர்த்திகள்* 

* விநாயகர் 

* முருகர் 

* சிவபெருமான் 

* சக்தி (அம்மன்) 

* சண்டிகேஸ்வரர்

 

 *இறைவனின் திருநாமம்* 

1.விருத்தகிரீஸ்வரர்

2. பழமலைநாதர்

3.விருத்தாசலேஸ்வரர் 4.முதுகுன்றீஸ்வரர்

5.விருத்தகிரி

 

 *கோபுரங்கள்* 

* கிழக்கு கோபுரம்

* வடக்கு கோபுரம் 

* மேற்கு கோபுரம் 

* தெற்கு கோபுரம் 

* கண்டராதித்தன் கோபுரம் 

 

 *நந்திகள் ஐந்து* 

1. இந்திர நந்தி

2. வேத நந்தி

3. ஆத்ம நந்தி 

4. மால்விடை நந்தி

5. தர்ம நந்தி

 

 *விநாயகர்* 

 1. ஆழத்துப் பிள்ளையார்

2. மாற்றுரைத்த விநாயகர் 

3. முப்பிள்ளையார் 

4. தசபுஜ கணபதி 

 5.வல்லப கணபதி

 

 

 *ஈசனை வழிபட்ட முனிவர்கள்* 

1. உரோமச முனிவர்

2. விபசித்து முனிவர் 

3. குமார தேவர் 

4. நாதசர்மா

5. அனவர்த்தினி

 

 

 *திருச்சுற்று* 

 1.தேரோடும் திருச்சுற்று 

2. கயிலாய திருச்சுற்று

3. வன்னியடி திருச்சுற்று

4. அறுபத்து மூவர் திருச்சுற்று

5. பஞ்சவர்ண திருச்சுற்று

 

 

 *மண்டபங்கள்* 

 1.இருபது கால் மண்டபம் 

2. இடைகழி மண்டபம் 

3. தபன மண்டபம் 

4. மகா மண்டபம் 

5. இசை மண்டபம்

 

இறந்தவர்களுக்கு முக்தி அளிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. புனித காசியை விட இது புனிதமாகக் கருதப்படுகிறது, அதாவது வாரணாசி. காசியில் நம்பப்படுவது போல, இங்கும் அன்னை விருதாம்பிகை இறந்த ஆன்மாக்களை தனது மடியில் வைத்து, தனது புடவையின் பல்லுவால் அவர்களை ஊதுகிறார், அதே நேரத்தில் சிவன் நமசிவாய மந்திரத்தை இறந்தவர்களின் காதுகளில் உச்சரித்து அவர்களின் முக்தியை உறுதி செய்கிறார். எனவே பழங்காலத்தில் விருத்தாசல மக்கள் வயதாகி பலவீனமடையும் போது வாரணாசிக்கு யாத்திரை மேற்கொள்ள ஒருபோதும் கவலைப்படவில்லை. இதன் விளைவாக, இந்த இடம் விருத்தகாசி என்றும் அழைக்கப்படுகிறது. காசியை விட இங்கு நன்மையின் அளவு சற்று அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது, எனவே "விருத்தகாசியில் காசியில் வீசம் அதிகாம்" என்று பழமொழி கூறுகிறது.

 

இத்தலத்தில் பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

சிவ.முத்து லட்சுமணன்

போச்சம்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம்.