tamilnadu epaper

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில்


வேலூர் தங்க கோவில் வேலூர்


 அருகே ஸ்ரீபுரம் என்ற இடத்தில் 


அமைந்துள்ளது. லட்சுமி நாராயணர் 


பொற்கோவில் ஆகும். திருப்பதியில் 


 இருந்து 120 கிலோமீட்டர் 


சென்னையில் இருந்து 145 கிலோ 


 மீட்டர் புதுச்சேரியில் இருந்து 160 


கிலோமீட்டர் மற்றும் பெங்களூரில் 


இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் 


உள்ளது. இந்தக் கோவில் 


செல்வத்துக்கு அதிபதியாக 


விளங்குகிறது 2007 ஆம் ஆண்டு 


 ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி 


குடமுழுக்கு செய்யப்பட்டது. 


இந்த கோவில் 1500 கிலோ 


சுத்தமான தங்கத்தால் ஆன தகடுகள் 


கொண்டு செய்யப்பட்டது.


அமிர்தசரஸ் 


பொற்கோவில் 750 கிலோ 


தங்கத்தால் ஆனது அதைப்போன்று 


இரு மடங்கு தங்கத்தால் இந்த 


 கோவில் அமைக்கப்பட்டுள்ளது. 



இந்த கோவில் 100 ஏக்கர் பரப்பளவில் 


சிறப்பாக அமைந்துள்ளது 


எங்கு பார்த்தாலும் வண்ணப் 


 பூக்களும் இயற்கை தாவரங்களும் 


நிறைந்து காணப்படும். இந்த கோவில் 


நட்சத்திர வடிவில் 


 அமைக்கப்பட்டுள்ளது.


இதன் 


தலைவராக நாராயணி பீடம் 


சத்தி அம்மா என்பவர் செயல்பட்டு 


வருகிறார். இந்த கோவில் 


தேசிய பசுமை விருதை பெற்றுள்ளது 


குறிப்பிடத்தக்கதாகும். கோவில் 


நடைபாதைகளில் ஆன்மீக 


குறிப்புகள் எழுதப்பட்டு இருக்கும். 


இக்கோவிலில் விமானம் சுத்தமான 


தங்கத் தகடுகளால் மூடப்பட்டு 


 இருக்கும் கோவிலில் நடைபாதை 


1.8 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 


காலை 4 மணி முதல் இரவு 


எட்டு மணி வரை நடை திறந்து 


இருக்கும். கோவில் கட்டும் எண்ணம் 


நாராயணி அம்மா கனவில் 


வந்ததாகும். ஏழு ஆண்டுகள் 


கட்டிடப் பணி நடந்து தங்க தகடுகள்


மேய்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு 


திறக்கப்பட்டது. அனைத்து ஆறுகளில் 


இருந்தும் புனித நீர் எடுக்கப்பட்டு 


சர்வ தீர்த்த குளம் அமைக்கப்பட்டது 


இங்கு உள்ள பூங்காக்களில் 


2000 வகையான தாவரங்கள் 


இடம் பெற்றுள்ளது சிறப்பு அம்சமாகும் 


இந்த கோவிலின் சார்பாக 


ஒரு மருத்துவமனை செயல்படுகிறது 


அனைவரும் பார்க்க வேண்டிய 


அற்புதமான கோவில் ஆகும்



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி